உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Wednesday, March 31, 2010

பையா - அடடா மழைடா

அடடா மழைடா
அட மழைடா
அழகா சிரிச்சா
புயல் மழைடா
அடடா மழைடா
அட மழைடா
அழகா சிரிச்சா
புயல் மழைடா
மாரி மாரி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாலாச்சு
கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு
ஏதேதோ ஆயாச்சு
மயில் தோக போல
இவ மழையில் ஆடும் போது
ரயில் பாலம் போல
என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு
ஏதேதோ ஆயாச்சு

அடடா மழைடா
அட மழைடா
அழகா சிரிச்சா
புயல் மழைடா

பாட்டு பாட்டு
பாடாத பாட்டு
மழை தான் பாடுது
கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வெச்ச
மழைக்கொரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலயே
உனக்குள்ளே தேடி பாரு
மந்திரம் போல இருக்கு
புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு
தல மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே
என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே

உன்னப்போல வேறாறும் இல்ல
என்னவிட்டா வேறாறு சொல்ல
சின்ன சின்ன கண்ணு ரெண்ட
கொடுத்தென்ன அனுப்பி வெச்சான்
இந்த கண்ணு போதலயே
எதுக்கிவள படைச்சி வெச்சான்
பட்டாம்பூச்சி பொண்ணு
நெஞ்சு படபடக்கும் நின்னு
பூவும் இவளும் ஒண்ணு
என்னை கொன்னுப்புட்டா கொன்னு
போவது எங்கே
நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே

அடடா மழைடா
அட மழைடா
அழகா சிரிச்சா
அனல் மழைடா

அடடா மழைடா
அட மழைடா
அழகா சிரிச்சா
அனல் மழைடா

பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து குடை பிடிக்க
வானம் ரெண்டாச்சு
பூமி துண்டாச்ச்சு
என் மூச்சு காத்தால
மழ கூட சூடாச்சு
குடையை நீட்டி யாரும்
இந்த மழையை தடுக்க வேணாம்
அணைய போட்டு யாரும்
என் மனச அடக்க வேணாம்
கொண்டாடு கொண்டாடு
கூத்தாடி கொண்டாடு

பையா - பூங்காற்றே பூங்காற்றே

பூங்காற்றே பூங்காற்றே
பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம்
சந்தோஷம் தந்தாள் இவள்

என் நெஞ்சோடு வீசும்
இந்த பெண்ணோட வாசம்
இவள் கண்ணோடு பூக்கும்
பல விண்மீன்கள் தேசம்

என் காதல் சொல்ல
ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே
இனி கனவே இல்லை

பூங்காற்றே பூங்காற்றே
பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம்
சந்தோஷம் தந்தாள் இவள்

மஞ்சள் வானம்
கொஞ்சம் மேகம்
கொஞ்சி பேசும் காற்று
தொட்டுச் செல்லுதே
நிறுத்தாமல்
சிரிக்கின்றேன்
இந்த நிமிடங்கள்
புன்னகையை கூட்டிக்கொண்டதே
கண்ணாடி சரி செய்து
பின்னாடி உன் கண்ணை
பார்க்கின்றேன் பார்க்கின்றேன்
பெண்ணே நான் உன் முன்னில்
ஒரு வார்த்தை பேசாமல்
தோற்கின்றேன் தோற்கின்றேன்
வழிபோக்கன் போனாலும்
வழியில் காலடி தடம் இருக்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி
வாசனையோடு நினைவிருக்கும்

பூங்காற்றே பூங்காற்றே
பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம்
சந்தோஷம் தந்தாள் இவள்

அழகான
நதி பார்த்தால்
அதன் பெயரினை கேட்க
மனம் துடிக்கும்
இவள் யாரோ
என்ன பேரோ
நானே அறிந்திடும் வரையில்
ஒரு மயக்கம்
ஏதேதோ ஊர் தாண்டி
ஏராளம் பேர் தாண்டி
போகின்றேன் போகின்றேன்
நில்லென்று சொல்கின்ற
நெடுங்சாலை விளக்காக
அலைகின்றேன் எரிகின்றேன்
மொழி தெரியா பாடலிலும்
அர்த்தங்கள் இன்று புரிகிறதே
வழி துணையாய் நீ வந்தாய்
போகும் தூரம் குறைகிறதே

என் நெஞ்சோடு வீசும்
இந்த பெண்ணோட வாசம்
இவள் கண்ணோடு பூக்கும்
பல விண்மீன்கள் தேசம்

என் காதல் சொல்ல
ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே
இனி கனவே இல்லை

பூங்காற்றே பூங்காற்றே
பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம்
சந்தோஷம் தந்தாள் இவள்

பையா - சுத்துதே சுத்துதே பூமி

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி

ஹேய்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே
அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி
பழகிய ராதே
எதனாலே இந்த மாற்றம்
மனசுக்குள் ஏதோ மாய தோற்றம்
எதனாலே இந்த ஆட்டம்
இதயத்தில் இன்று ஊஞ்சல் ஆட்டம்

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி

ிரித்து சிரித்துதான்
பேசும் போதிலே
வலைகளை நீ விரிக்கிராய்
சைவம் என்றுதான்
சொல்லிக்கொண்டு நீ
கொலைகளை ஏன் செய்கிறாய்
அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே
என்ன சொல்ல உந்தன் விரட்டும் அழகையே
வெட்ட வெளி நடுவே அட
கொட்ட கொட்ட
விழித்தே துடிக்கிறேன்

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி

இதயம் உருகிதான்
கரைந்து போவதை
பார்க்கிறேன்
நான் பார்க்கிறேன்
இந்த நிமிடம்தான்
இன்னும் தொடருமா
கேட்கிறேன்
உனை கேட்கிறேன்
இது என்ன இங்கு வசந்த காலமா
இடைவெளி இன்னும் குறைந்து போகுமா
இப்படி ஓர் இரவும்
அட இங்கு வந்த நினைவும்
மறக்குமா

ஹேய்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே
அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி
பழகிய ராதே
உன் அழகை
விண்ணில் இருந்து
எட்டி எட்டி நிலவு
பார்த்து ரசிக்கும்
உன் கொலுசில்
வந்து வசிக்க
குட்டி நட்சத்திரங்கள்
மண்ணில் குதிக்கும்

பசங்க - ஒரு வெட்கம் வருதே வருதே

ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலை பாயுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
போக சொல்லி கால்கள் தள்ள
நிற்க சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே
இனி இது தொடர்ந்திடுமே
இது தரும் தரும் தடுமாற்றம் சுகம்

மழை இன்று வருமா வருமா
குளிர் கொஞ்சம் தருமா தருமா
கனவென்னை களவாடுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
கேட்டு வாங்கி கொள்ளும் துன்பம்
கூறு போட்டு கொல்லும் இன்பம்
பர பர பரவெனவே
துடி துடித்திடும் மனமே
வர வர வர கரை தாண்டிடுமே

மேலும் சில முறை
உன் குறும்பிலே
நானே தோற்கிறேன்
உன் மடியிலே
என் தலையணை
இருந்தால் உறங்குவேன்
ஆணின் மனதிற்குள்ளும்
பெண்மை இருக்கிறதே
தூங்க வைத்திடவே
நெஞ்சம் துடிக்கிறது
ஒரு வரி நீ சொல்ல
ஒரு வரி நான் சொல்ல
எழுதிடும் காதல் காவியம்
அனைவரும் கேட்கும் நாள் வரும்

மழை இன்று வருமா வருமா
குளிர் கொஞ்சம் தருமா தருமா
கனவென்னை களவாடுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
கேட்டு வாங்கி கொள்ளும் துன்பம்
கூறு போட்டு கொல்லும் இன்பம்

இது முதல் அனுபவமே
இனி இது தொடர்ந்திடுமே
வர வர வர கரை தாண்டிடுமே


காற்றில் கலந்து நீ
என் முகத்திலே
ஏனோ மோதினாய்
பூ மரங்களில்
நீ இருப்பதால்
என் மேல் உதிர்கிறாய்
ஆ தூது அனுப்பிடவே
நேரம் எனக்கில்லையே
நினைத்த பொழுதினிலே
வரணும் எதிரினிலே
வெயிலினில் ஊர்கோலம்
இதுவரை நாம் போனோம்
நிகழ்கிறதே கார்காலமே
நனைந்திடுவோம் நாள் தோறுமே

ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலை பாயுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
போக சொல்லி கால்கள் தள்ள
நிற்க சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே
துடி துடித்திடும் மனமே
வர வர வர கரை தாண்டிடுமே

சர்வம் - சிறகுகள் வந்தது

சிறகுகள் வந்தது
எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது
கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது
உன்னை காணவே


கனவுகள் பொங்குது
எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது
உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது
உன்னை தேடியே

உன்னை உன்னை
தாண்டி செல்ல
கொஞ்ச காலம்
கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம்
கூட என்னால் ஆகுமோ

உன்னை உன்னை
தேடி தானே
இந்த ஏக்கம்
இந்த பாதை
இந்த பயணம்
இந்த வாழ்க்கை ஆனதோ

கனவுகள் பொங்குது
எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது
உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது
உன்னை தேடியே

நதியே நீ எங்கே என்று
கரைகள் தேட கூடாதா
நிலவே நீ எங்கே என்று
முகில்கள் தேட கூடாதா

மழை இரவினில் குயிலின் கீதம்
துடிப்பதை யார் அறிவார்
கடல் நடுவினில் மிதக்கும் படகின்
கனவுகள் யார் அறிவார்

அழகே நீ எங்கிருக்கிறாய்
வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்

அன்பே எந்தன்
நெஞ்சம் இங்கே
பூவின் உள்ளே
நிழலின் மேலே
தீயின் கீழே
காற்றின் வெளியே
இல்லையே
உந்தன் கண்ணில்
உந்தன் மூச்சில்
உந்தன் நிழலில்
உந்தன் நெஞ்சில்
உந்தன் கையில்
உந்தன் உயிரில்
உள்ளாதே

எனக்கே நான்
சுமையாய் மாறி
என்னை சுமந்து வந்தனே
உனக்காய் நான்
நிழலாய் மாறி
உன்னை தேடி வந்தனே

விழி நனைந்திடும்
நேரம் பார்த்து
இமை விலகி விடாது
உயிர் துடித்திடும்
உன்னை எந்தன்
உயிர் ஒடுக்கி விடாது

உருவம் ஒரு புள்ளி ஆகுதே
நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதா
உயிரில் ஒரு பூ வெடிக்குதே
சுகமோ வலியோ எல்லை மீறுதே

சிறகுகள் வந்தது
எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது
கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது
உன்னை காணவே

ஒரு இமை எங்கிலும்
தேனில் மூழ்க
ஒரு இமை மாத்திரம்
வலியில் நோக
இடையினில் எப்படி
கனவும் காணுமோ


உன்னை உன்னை
தாண்டி செல்ல
கொஞ்ச காலம்
கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம்
கூட என்னால் ஆகுமோ

உன்னை உன்னை
தேடி தானே
இந்த ஏக்கம்
இந்த பாதை
இந்த பயணம்
இந்த வாழ்க்கை ஆனதோ

சிவா மனசுல சக்தி - ஒரு கல்

ஒரு கல்
ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால்
காதல்

ஒரு சொல்
சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால்
காதல்

கண்கள் ரெண்டில்
காதல் வந்தால் ஹோ
கண்ணீர் மட்டும்
துணை ஆகுமே
ஒஹ் ஹோ ஹோ

ஒரு கல்
ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால்
காதல்

ஒரு சொல்
சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால்
காதல்

திமிருக்கு மறு பெயர் நீதானே
தினம் தினம் உன்னால் இறந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே

தீ என புரிந்தும் அடி நானே
திரும்பவும் உனை தொட வந்தேனே
தெரிந்தே சுகமாய் எரிந்தேனே

கடும் விஷத்தினை எடுத்து குடித்தாலும்
அடி கொஞ்ச நேரம் கழித்தே உயிர் போகும்
இந்த காதலிலே உடனே உயிர் போகும்
காதல் என்றால் பெண்ணே
சித்ரவதை தானே


ஒரு கல்
ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால்
காதல்

ஒரு சொல்
சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால்
காதல்


உன் முகம் பார்த்தே நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழலுடனே நான் வருவேன்

புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்
புறக்கணித்தால் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்

உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை
உன் மௌனத்தில் இருக்கும் என்ன வலிகள்
காதல் என்றால் மெல்ல
சாதல் என்று சொல்ல


ஒரு கல்
ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால்
காதல்

ஒரு சொல்
சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால்
காதல்

கண்கள் ரெண்டில்
காதல் வந்தால்
கண்ணீர் மட்டும்
துணை ஆகுமே
ஒஹ் ஹோ ஹோ

ஒரு கல்
ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால்
காதல்

ஒரு சொல்
சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால்
காதல்

அறை எண் 305 -ல் கடவுள் - குறை ஒன்றும் இல்லை

குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

எல்லோருக்கும் சில நேரம் வரும் சோதனை
இருந்தாலும் கூடாது மன வேதனை

எல்லோருக்கும் சில நேரம் வரும் சோதனை
இருந்தாலும் கூடாது மன வேதனை

வெற்றி தோல்வி யாவும் நம் வாழ்கை பாடமே
தோல்வி காட்டும் ஞானம் புது வேதம் ஆகுமே
எது வந்த போதும் அதை ஏற்றுகொள்வாய்
இருள் கூட ஒளி வீசும் துணிந்தே செல்வாய்
எதற்கும் ஓர் நாள் உண்டு
எல்லோர்க்கும் வாழ்வுண்டு

மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கீழ்நோக்கி பிடித்தாலும் மேல்நோக்கியே
எரிகின்ற சுடர்போல எழவேண்டுமே

கீழ்நோக்கி பிடித்தாலும் மேல்நோக்கியே
எரிகின்ற சுடர்போல எழவேண்டுமே

மண்ணில் மூடினாலும் விதை மாய்ந்து போகுமோ
வலை விண்ணில் வீசினாலும் வான்மீன்கள் வீழுமோ
உழைப்பார்க்கு என்றும் இழப்பேதும் இல்லை
இழந்தாலும் அதை மீண்டும் பெறுவார் கண்ணா
தளராது புயல்போலே
வரலாறு படைப்பாரே

மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

ஜெயம் கொண்டான் - நான் வரைந்து வைத்த சூரியன்

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே
என் தலை நனைத்த மழைதுளி அமுதம் ஆனதே
நான் இழுத்து விட்ட மூச்சிலே இசைக்கசிநதே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே மலருகின்றதே

===

ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே

கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு
தங்க சிற்பமென்று மாறியதே

ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே

கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு
தங்க சிற்பமென்று மாறியதே

பூக்கும் புன்னகையாலே என் தோள்கள் ரெக்கைகள் ஆக
நாக்கு உன் பெயர் கூர என் நாள்கள் சக்கரை ஆக

தலைகீழ் தடுமாற்றம் தந்தாய்
என்னில் என் கால்களில்

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே

===

பள்ளி செல்லவில்லை பாடம் கேட்க வில்லை
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்

நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்

பள்ளி செல்லவில்லை பாடம் கேட்க வில்லை
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்

நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்

ஊஞ்சல் கயிரு இல்லாமால் என் ஊமை மனது ஆடும்
தூங்க இடம் இல்லாமால் என் காதல் கனவை நாடும்

நொடியும் விலகாமல் கொஞ்சும்
கொஞ்ச தங்கும் நெஞ்சே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே
என் தலை நனைத்த மழைதுளி அமுதம் ஆனதே
நான் இழுத்து விட்ட மூச்சிலே இசைக்கசிநதே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே

டிஷ்யூம் - நெஞ்சாங்கூட்டில்

ஹேய் !
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் - பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டி போட்டு காதல் செய்கிறாய் - முதுகில்
கட்டறெம்பு போலே உருகிறாய்
காதல் தானே இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிறுத்திவிட்டால்
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்
இன்னும் பூமுகம் மறக்கவில்லை

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் - பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்

ஹேய் !
விண்ணை துடைக்கின்ற முகிலை, வெள்ளி நிலவை,
மஞ்சள் நட்ஷத்திரத்தை..
என்னைத்தேடி மண்ணில் வரவழைத்து
உன்னை காதலிப்பதை உரைப்பேன்
இன்று பிறக்கின்ற பூவுக்கும், சிறு புல்லுக்கும்,
காதல் உரைத்துமுடிப்பேன்..
உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும்
இன்னும் சொல்லவில்லையே இல்லையே..
லட்சம் பல லட்சம் என்று
தாய்மொழியில் சொல்லிருக்க
ஒத்தச் சொல்லு சிக்கவில்லை எதனாலே ?
பந்திவெச்ச வீட்டுக்காரி பாத்திரத்தை கழுவிவிட்டு பட்டினியாய்
கிடப்பாளே அது போல...!!!

நெஞ்சாங்கூட்டில்..நெஞ்சாங்கூட்டில்..
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் - பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்


சின்ன சின்ன செல்ல குரும்பும், சீனி சிரிப்பும்,
என்னை சீரழிக்குதே..
விரு விருவென வளரும் பழம்
எந்தன் விரதங்களை வெல்லுதே
உன்னை கரம் பற்றி இழுத்து, வளை உடைத்து,
காதல் சொல்லிடச் சொல்லுதே..
வெக்கம் இரு பக்கம் மீசை முளைத்து என்னை
குத்தி குத்தியே கொல்லுதே..
காதல் எந்தன் வீதி வழி
கையை வீசி வந்த பின்னும்
கால் கடுக்க காத்துருக்கேன் எதனாலே ?
பிப்ரவரி மாதத்துக்கு நாளு ஒன்னு கூடி வர
அந்த நாளும் காத்திருக்கும் அது போல...!!!

நெஞ்சாங்கூட்டில்..நெஞ்சாங்கூட்டில்..
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் - பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்

காதல் தானே இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிருத்திவிட்டால்
னெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்
இன்னும் பூமுகம் மறக்கவில்லை

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் - பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் - பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்

நான் அவன் இல்லை - ஏன் எனக்கு மயக்கம்

ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு

ஏன் எனக்கு வியர்வை
ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

ஹேய்
இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இந்த சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன்
பரந்தேன் ஒஹோ

நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன்
கலைந்தேன்

ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு

ஏய் ஏய் ஏய்
ஏன் எனக்கு வியர்வை
ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

=====

சம்மதமா சேலை போர்வை
போர்த்திக்கொன்று நீ தூங்க

சம்மதமா வெட்கம் கொண்டு
ஏக்கம் கூட்டிட

சம்மதமா என்னை உந்தன்
குந்தலுக்குள் குடியேத்த

சம்மதமா எனக்குள் வந்து
கூச்சம் மூட்டிட

கட்டிகொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்
உன்னை மட்டும் சாகும் பொது தேட சம்மதம்
உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்
உன்னை தோளில் சாய்த்து கொண்டு போக சம்மதம்

ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு

ஏய் ஏய் ஏய்
ஏன் எனக்கு வியர்வை
ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

=====

this is the way to go
this is ecstasy
this song is just away
glim and dream
feel is so
meant to be
yO ho
=====

காதல் எனும் பூங்கவனத்தில்
பட்டாம்பூச்சி ஆவோமா

பூக்கள் விட்டு பூக்கள் தாவி
முழ்கி போவோமா

காதல் எனும் கூண்டில் அடைந்து
ஆயுள் கைதி ஆவோமா

ஆசை குற்றம் நாளும் செய்து
சட்டம் மீராம்மா

லட்சம் மின்னல் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்
காதல் கொண்ட பொது தன்னை நேரில் பார்க்கிறேன்
எந்த பெண்ணை காணும்போதும் உன்னை பார்க்கிறேன்
உன்னை காதல் செய்து காதல் செய்தே கொல்லப்போகிறேன்

=====

ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு

ஏன் எனக்கு வியர்வை
ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

ஹேய்
இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இந்த சுகம் உன்னில் உணர்ந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்

ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு

ஏய் ஏய் ஏய்
ஏன் எனக்கு வியர்வை
ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு