உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Thursday, June 10, 2010

மன்மதன் - மன்மதனே

மன்மதனே நீ கலைஞன் தான்
மன்மதனே நீ கவிஞன் தான்
மன்மதனே நீ காதலன் தான்
மன்மதனே நீ காவலன் தான்

என்னை உனக்குள்ளே தொலைத்தேன் ஏனோ தெரியலை
உன்னை கண்ட நொடி ஏனோ இன்னும் நகரல
உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை

எத்தனை ஆண்கள் கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உன்னை போல் எவனும்
என்னையும் மயக்கவில்லை

எத்தனை ஆண்கள் கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உன்னை போல் எவனும்
என்னையும் மயக்கவில்லை

மன்மதனே நீ கலைஞன் தான்
மன்மதனே நீ கவிஞன் தான்
மன்மதனே நீ காதலன் தான்
மன்மதனே நீ காவலன் தான்
---
நானும் ஓர் பெண்ணென
பிறந்த பலனை இன்றே தான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின்
ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடி கொண்டே இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும் ஓடி கொண்டே இருக்கிறாய்
அழகாய் நானும் மாறுகிறேன்,
அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன்
உனக்கேதும் தெரிகிறாதா?
---
ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிற என்ன விசித்திரமோ?
நண்பனே எனக்கு காதலன் ஆனால் அதுதான் சரித்திரமோ?

ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிற என்ன விசித்திரமோ?
நண்பனே எனக்கு காதலன் ஆனால் அதுதான் சரித்திரமோ?

மன்மதனே உன்னை பார்க்கிறேன்
மன்மதனே உன்னை ரசிக்கிறேன்
மன்மதனே உன்னை ருசிக்கிறேன்
மன்மதனே உன்னில் வசிக்கிறேன்

உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ
உந்தன் முன்னாடி மட்டும் வெட்கம் மறக்கவோ
எந்தன் படுக்கை அறைக்கு உந்தன் பெயரை வைக்கவோ

அடிமை சாசனம் எழுதி தருகிறேன், என்னை ஏற்று கொள்ள
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன், அன்பாய் பார்த்து கொள்ள
அடிமை சாசனம் எழுதி தருகிறேன், என்னை ஏற்று கொள்ள
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன், அன்பாய் பார்த்து கொள்ள

மன்மதன் - காதல் வளர்தேன்...

காதல் வளர்தேன்...
காதல் வளர்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்தேன்

காதல் வளர்தேன்...
காதல் வளர்தேன்...
உசுருகுள்ள கூடு கட்டி
காதல் வளர்தேன்

ஏ... இதயதின் உள்ளே பெண்ணெ நான்
செடி ஒன்னு தான் வெச்சி வளர்தேன்
இன்றே அதில் பூவை நீ தான்
பூத்தவுடனே காதல் வளர்தேன்

ஏய் புள்ள புள்ள...
உன்னை எங்கே புடிச்சேன்...
ஏய் புள்ள புள்ள...
அத கண்டுபுடிச்சேன்
ஏய் புள்ள புள்ள...
உன்னை கண்ணில்புடிச்சேன்
ஏய் புள்ள புள்ள...
உன்னை நெஞ்சில் வெதச்சேன்
ஏய் புள்ள...

காதல் வளர்தேன்...
காதல் வளர்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்தேன்

காதல் வளர்தேன்...
காதல் வளர்தேன்...
உசுருகுள்ள கூடு கட்டி
காதல் வளர்தேன்
---
பூவின் முகவரி காற்று அறியுமே
என்னை உன் மனம் அறியாத...
பூட்டி வைத என் ஆசை மேகங்கள்
உன்னை பார்த்ததும் பொழியாதா...
பழ கோடி பெண்கள் தான்...
பூமியிலே வாழலாம்
ஒரு பார்வையால் மனதை
பரித்து சென்றவள் நீ அடி...
உனக்கெனவே காத்திருந்தாலே
கால் அடியில் வேர்கள் முளைக்கும்
காதலில் வலியும் இன்பம் தானே... மாஅனே...
உன்னது பெயரழுதி பக்கதில்லே
என்னது பெயரை நானும் எழுதி வெச்சேன்
அது மழையில் அழியாமல் கொடபுடிச்சேன்
மழை விட்டும் நான் நனைஞ்சேன்...
--
ஏய் புள்ள புள்ள...
உன்னை எங்கே புடிச்சேன்...
ஏய் புள்ள புள்ள...
அத கண்டுபுடிச்சேன்
ஏய் புள்ள புள்ள...
உன்னை கண்ணில்புடிச்சேன்
ஏய் புள்ள புள்ள...
உன்னை நெஞ்சில் வெதச்சேன்
ஏய் புள்ள...

காதல் வளர்தேன்...
காதல் வளர்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்தேன்

காதல் வளர்தேன்...
காதல் வளர்தேன்...
உசுருகுள்ள கூடு கட்டி
காதல் வளர்தேன்
---
உன்னை தவிர இங்கே எனக்கு யாரடி
உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்
உனது சுவாசத்தின் சூடுதீண்டினால்
மரணம் வந்தும் நான் உயிர் தெழுவேன்
உன் முகத்தை பார்க்கவே...
என் விழிகள் வாழுதே...
பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நான் அடி...
உடல் பொருள் ஆவி அனைத்தும்
உனக்கெனெவே தருவேன் பெண்ணே
உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே...கண்ணே...
தந்தை அன்பு அது பிறக்கும் வரை...
தாயின் அன்பு அது வளரும் வரை...
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ...
உயிரோடு வாழும் வரை...
அடியே ஏய் புள்ள புள்ள
---
காதல் வளர்தேன்...
காதல் வளர்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்தேன்

காதல் வளர்தேன்...
காதல் வளர்தேன்...
உசுருகுள்ள கூடு கட்டி
காதல் வளர்தேன்

இதயத்தின் உள்ள பெண்ணே நான்
செடி ஒன்னு தான் வெச்சி வளர்தேன்
இன்றே அதில் பூவை நீ தான்
பூத்தவுடனே காதல் வளர்தேன்

ஏய் புள்ள புள்ள...
உன்னை எங்கே புடிச்சேன்...
ஏய் புள்ள புள்ள...
அத கண்டுபுடிச்ச
ஏய் புள்ள புள்ள...
உன்னை கண்ணில்புடிச்ச
ஏய் புள்ள புள்ள...
உன்னை நெஞ்சில் வெதச்ச
ஏய் புள்ள...

காதல் - தொட்டு தொட்டு

எங்கே நான் போனாலும் என் வாழ்வில் என்றும்
உன் நிழலில் இளைபாற வருவேன் கண்ணே
மரணம் தான் வந்தாலும் பூச்செண்டு தந்து
உன் மடியில் தலை சாய்ந்து இறப்பேன் பெண்ணே
பெண்ணே பெண்ணே பெண்ணே

தொட்டு தொட்டு என்னை
வெற்றுகளி மண்ணை
சிற்பமாக யார் செய்ததோ
சிற்பமாக யார் செய்ததோ

தொட்டு தொட்டு என்னை
பட்டாம்பூச்சி பெண்ணை
திட்டமிட்டு யார்வென்றதோ
திட்டமிட்டு யார்வென்றதோ

விழியில் விழுந்து வழியினை மறக்கிறேன்
உன்னக்குள் தொலைந்து உயிரோடு கலக்கிறேன்

தொட்டு தொட்டு என்னை
வெற்றுகளி மண்ணை
சிற்பமாக யார் செய்ததோ
சிற்பமாக யார் செய்ததோ

தொட்டு தொட்டு என்னை
பட்டாம்பூச்சி பெண்ணை
திட்டமிட்டு யார்வென்றதோ
திட்டமிட்டு யார்வென்றதோ
---
தாயுடன் பேசும் வார்தைகள் எல்லாம்
உடனே மறக்கும்
உன்னுடன் பேசும் வார்தைகள் எல்லாம்
உள்ளே நிலைக்கும்

முதல் முறை உன்னை பார்த்தது
எங்கே மனதும் தேடும்
மழை நின்ற பின்னும் மரக்கிளை
இங்கே மெதுவாய் தூரும்

இதயத்தின் உள்ளே இமயத்தை போலே
சுமைகளை வைத்தால்...காதல்

உலகத்தில் உள்ள சித்ரவதைக்கெல்லாம்
செல்ல பெயர் வைத்தால்...காதல்
--
எங்கே நான் போனாலும் என் வாழ்வில் என்றும்
உன் நிழலில் இலைபாற வருவேன் கண்ணே
மரணம் தான் வந்தாலும் பூச்செண்டு தந்து
உன் மடியில் தலை சாய்ந்து இறப்பேன் பெண்ணே
---
கரு விழி ரெண்டும் கருவரைதனோ
மீண்டும் பிறந்தேன்
கங்காருவை போலே நெஞ்சுகுள்ளே நானே
உன்னை சுமந்தேன்

உன்னை போலே யாரும் என்னை தாண்டி போனால்
உன்னை நினைப்பேன்
உந்தன் ஆசை முகம் பார்த்து கிடக்கதான்
உயிரை சுமப்பேன்

நெருங்கவும் இல்லை
விலகவும் இல்லை
நெஞ்சம் செய்யும் தொல்லை...காதல் காதல் காதல்

தொடக்கவும் இல்லை
முடிவுகள் இல்லை
கடவுளை போலே...காதல்
--
தொட்டு தொட்டு உன்னை வெற்றுகளிமண்ணை
சிற்பமாக யார் செய்ததோ

தொட்டு தொட்டு உன்னை
பட்டாம்பூச்சி பெண்ணை
திட்டமிட்டு யார்வென்றதோ

விழியில் விழுந்து வழியினை மறக்கிறேன்
உனக்குள் தொலைந்து....உயிரோடு கலக்கிறேன்

தொட்டு தொட்டு உன்னை
வெற்றுகளிமண்ணை
சிற்பமாக யார் செய்ததோ

தொட்டு தொட்டு உன்னை
பட்டாம்பூச்சி பெண்ணை
திட்டமிட்டு யார்வென்றதோ

உள்ளம் கேட்குமே - என்னை பந்தாட

என்னை பந்தாட பிறந்தவளே
இதயம் ரெண்டாக பிளந்தவளே
ஓசை இல்லாமல் மலர்ந்தவளே
உயிரை கண் கொண்டு கடைந்தவளே
உன்னை கண்ட பின் இந்த மண்ணை நேசித்தேன்
காலம் யாவும் காதல் கொள்ள வாராயோ

என்னை பந்தாட பிறந்தவளே
இதயம் ரெண்டாக பிளந்தவளே
ஓசை இல்லாமல் மலர்ந்தவளே
உயிரை கண் கொண்டு கடைந்தவளே
---
செங்குயிலே சிறு வெயிலே
மண்ணில் உள்ள வளம் இன்ன தின்னதென
செயற்கை கோள் அறியும் பெண்ணே
உன்னில் உள்ள வளம் என்ன தென்னதென
உள்ளங்கை அறியும் கண்ணே
நீ அழகின் மொத்தம் என்று சொல்லி
அந்த பிரம்மன் வைத்த முற்று புள்ளி
செங்குயிலே... சிறு வெயிலே...
வாய் திறந்து கேட்டுவிட்டேன்
வாழ்வை வாழ விடு அன்பே
--
இனியவனே இணையவனே
உன்னை காணவில்லை என்னும் போது
நெஞ்சில் சின்ன பைத்தியங்கள் பிடிக்கும்
பஞ்சு மெத்தைகளில் தூக்கம் இல்லை என்று
பற்கள் தலையணையை கடிக்கும்
உன்னை தொட்டு பார்க்க மனம் துடிக்கும்
நெஞ்சில் விட்டு விட்டு வெடி வெடிக்கும்
சின்னவனே... என்னவனே...
மூக்கு மீது மூக்கு வைத்து
நெற்றி முட்டிவிட வாடா
---
என்னை கொண்டாட பிறந்தவனே
இதயம் ரெண்டாக பிளந்தவனே
ஓசை இல்லாமல் மலர்ந்தவனே
உயிரை கண் கொண்டு கடைந்தவனே
உன்னை கண்ட பின் இந்த மண்ணை நேசித்தேன்
காலம் யாவும் காதல் கொள்ள வாராயோ அன்பே

உள்ளம் கேட்குமே - மழை மழை

யார் வந்தது யார் வந்தது
உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போல் வந்தது
உள் நெஞ்சிலே போர் வந்தது
பூ வந்தது பூ வந்தது
கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது
பூ கண்களில் தீ வந்தது
ஏன் வந்தது ஏன் வந்தது
கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்
பெண் வந்ததும் பெண் வந்ததும்
உன் சூழலில் சத்தம் சத்தம்

மழை மழை
என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
என்ன திண்மை என்ன வன்மை
எந்த பெண்ணும் அதிசய விண்கலம்
போக போக புரிகின்ற போர்களம்
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்

மழை மழை
என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
எந்தன் மேனி உனக்கோரு தேன் குளம்
நீந்த நீந்த நிறைகின்ற நீர் வளம்
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்

யார் வந்தது யார் வந்தது
உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போல் வந்தது
உள் நெஞ்சிலே போர் வந்தது
பூ வந்தது பூ வந்தது
கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது
பூ கண்களில் தீ வந்தது
ஏன் வந்தது ஏன் வந்தது
கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்
பெண் வந்ததும் பெண் வந்ததும்
உன் சூழலில் சத்தம் சத்தம்
---
நீ மட்டும் ம்ம் என்றால் உடலோடு உடல் மாற்றம் செய்வேனே
நீ மட்டும் போ என்றால் அப்போதே உயிர் விட்டு செல்வேனே
அடி பருவ பெண்ணே நீயும் ஒரு பங்கு சந்தை போலே
சில ஏற்ற இறக்கங்கள் அட உந்தன் மேனி மேலே
பூவின் உள்ளே ஒரு தாகம் உன் உதடுகள் தான்
---
மழை மழை
என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
---
தீண்டாமல் சருகாகவேன் நீ வந்து தொட்டால் நான் சிறகாகவேன்
ஐயோடி நான் கல்லாவேன் உளியாக நீ வந்தால் கலையாவேன்
ஹே நீயும் ஓடி வந்து என்னை தீண்ட தீண்ட பாரு
ஒரு பாதரசம் போல நான் நழுவி செல்வேன் தேடு
ஏதோ ஏதோ வலி எந்தன் ஐம்புலங்களில் ஏன்?
---
மழை மழை
என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
எந்த பெண்ணும் அதிசய விண்கலம்
போக போக புரிகின்ற போர்களம்
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்

உள்ளம் கேட்குமே - ஒ மனமே ஒ மனமே

ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஒ மனமே ஒ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன்?
மழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகளை தந்தது யார்?
பூக்கள் தானே யாசித்தோம்
கூளாங்கற்களை எறிந்தது யார்?

ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஒ மனமே ஒ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன்?
---
மேகத்தை இழுது போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி
நம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து
முள்ளுக்குள் எரிந்தது காதலடி
கனவுக்குள்ளே காதலை தந்தாய்
கணுக்கள் தோறும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்
துளைகள் இன்றி நாயநமா?
தோல்விகள் இன்றி பூரணமா?
---
ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஒ மனமே ஒ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன்?
---
இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி
---
ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஒ மனமே ஒ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன்?
மழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகளை தந்தது யார்?
பூக்கள் தானே யாசித்தோம்
கூளாங்கற்களை எறிந்தது யார்?

ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஒ மனமே ஒ மனமே

சதுரங்கம் - எங்கே எங்கே

எங்கே எங்கே எங்கே என் வென்னிலவு
இங்கே இங்கே இங்கே ஏன் தொந்தரவு

எங்கே எங்கே எங்கே என் வென்னிலவு
இங்கே இங்கே இங்கே ஏன் தொந்தரவு
வீசும் தென்றல் உண்டு என்னை தீண்டவில்லை
வானவில்லும் உண்டு ஏனோ வண்ணம் இல்லை
எண்ணம் இங்கு உண்டு சொல்ல வார்தை இல்லை

ஏன் இந்த துன்பம் உன்னை காணவில்லை

எங்கே எங்கே எங்கே என் வென்னிலவு
இங்கே இங்கே இங்கே ஏன் தொந்தரவு
---
நீயா இன்பம் நீயே இன்பம்
நீயில்லாமல் எதுவும் துன்பம்
காதல் நம்மை சேதம் செய்தால்
யாரை நோவது

நீயா உண்மை நீயே உண்மை
நீயில்லாத உலகம் பொம்மை
காலம் நம்மை நோக செய்தால்
போதும் வாழ்வது

உதிராத ஞாபகம் ஒரு கோடி நீ தர
வரவான வேதனை செலவாகும் நீ வர

நான் மெல்ல நினைத்தேன் சொல்ல அழைத்தேன்
எங்கு தொலைத்தேன்
---
எங்கே எங்கே எங்கே என் வென்னிலவு
இங்கே இங்கே இங்கே ஏன் தொந்தரவு
---
காலை தந்தாய் மாலை தந்தாய்
காதல் பேசும் பொழுதும் தந்தாய்
வானம் தந்தாய் நீலம் தந்தாய்
யாவும் நீயடி

தூரல் தந்தாய் தூக்கம் தந்தாய்
தூர்ந்திடாத ஏக்கம் தந்தாய்
வாசம் தந்தாய் வாழ்வும் தந்தாய்
சுவாசம் நீயடி

அழகான பூமுகம் அகலாது காதலி
அணையாது கார்த்திகை துணையாகும் மார்கழி

நான் மெல்ல நினைத்தேன் சொல்ல அழைத்தேன்
எங்கு தொலைத்தேன்
---
எங்கே எங்கே எங்கே என் வென்னிலவு
இங்கே இங்கே இங்கே ஏன் தொந்தரவு

வீசும் தென்றல் உண்டு என்னை தீண்டவில்லை (தீண்டவில்லை)
வானவில்லும் உண்டு ஏனொ வண்ணம் இல்லை (வண்ணம் இல்லை )
எண்ணம் இங்கு உண்டு சொல்ல வார்தை இல்லை (வார்தை இல்லை )

ஏன் இந்த துன்பம்

சங்கமம் - வராக நதிக்கரை

ஓ...கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

கண்ணு தக்கு தக்கு தக்குங்குது...ஓஓஓ
உள்ள திக்கு திக்கு திக்குங்குது...ஓஓஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது...ஓஓஓ
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே
---
பஞ்சவர்ணக்கிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு
பஞ்சவர்ணக்கிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு
பறந்துவந்து...ம்ம்ம்ம்ம்...விருந்து கொடு...ம்ம்ம்ம்ம்
மனசுக்குள்ள சடுகுடு சடுகுடு
மயக்கத்துக்கு மருந்தொன்னு குடு குடு
ஓஓஓ காவேரிக்கரையில் மரமாயிருந்தால் வேருக்கு யோகமடி
என் கை ரெண்டும் தாவணியானால் காதல் பழுக்குமடி
---
கண்ணு தக்கு தக்கு தக்குங்குது...ஓஓஓ
உள்ள திக்கு திக்கு திக்குங்குது...ஓஓஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது...ஓஓஓ
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்
---
நீ என்னக் கடந்து போகயிலே உன் நிழல பிடிச்சுகிட்டேன்
நீ என்னக் கடந்து போகயிலே உன் நிழல பிடிச்சுகிட்டேன்
நிழலுக்குள்ள...ம்ம்ம்ம்ம்...குடியிருக்கேன்...ம்ம்ம்ம்ம்
ஒடம்பவிட்டு உசிர் மட்டும் தள்ளி நிக்க
கிழிஞ்ச நெஞ்ச எதக்கொண்டு நானும் தைக்க
ஓஓஓ ஒத்த விழிப்பார்வை ஊடுருவப் பார்த்து தாப்பா தெரிச்சிடுச்சு
தாப்பா தெரிச்சிடுச்சு
---
கண்ணு தக்கு தக்கு தக்குங்குது...ஓஓஓ
உள்ள திக்கு திக்கு திக்குங்குது...ஓஓஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது...ஓஓஓ
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

தானா தந்தனான தானனான
தானா தந்தனான தானனான
தானா தந்தனான தானனான
தானா தந்தனான தானனான

சங்கமம் - மழைத்துளி மழைத்துளி

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க - என்ன
ஆடாம ஆட்டிவைச்ச வணக்கமுங்க
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்
சபை ஆடிய பாதமிது நிக்காது ஒரு போதும்

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க - என்ன
ஆடாம ஆட்டிவைச்ச வணக்கமுங்க

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

---
தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல
எனக்குள்ள நான் அழுதா துடைக்கவே எனக்கொரு நாதியில்ல
என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே
சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை சலங்கை பாடுமே
மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு

நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம்
நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்
---
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க - என்ன
ஆடாம ஆட்டிவைச்ச வணக்கமுங்க
---
மழைக்காகத்தான் மேகம் அட கலைக்காகத்தான் நீயும் - உயிர்
கலந்தாடுவோம் நாளும் மகனே வா..
நீ சொந்தக்காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு
இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா... மகனே வா...
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்
புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது
போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது
மகனே... மகனே...
காற்றுக்கு ஓய்வென்பதேது...அட ஏது
கலைக்கொரு தோல்வி கிடையாது...கிடையாது ..கிடையாது
---
ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க - என்ன
ஆடாம ஆட்டிவைச்ச வணக்கமுங்க
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்
சபை ஆடிய பாதமிது நிக்காது ஒரு போதும்

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

இளமை ஊஞ்சல் ஆடுகிறது - என்னடி மீனாட்சி

வார்த்தை தவறி விட்டாய்.... கண்ணமா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்தில் எல்லாம் உன்னைபோல்
பாவை தெரியுது அடி

என்னடி மீனாட்சி - சொன்னது என்னாச்சு

என்னடி மீனாட்சி - சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு

என்னடி மீனாட்சி - சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு
---
உந்தன் உதட்டில் நிறைந்திருகும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்து இருக்கும் துளி விஷம்

உந்தன் உதட்டில் நிறைந்திருகும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்து இருக்கும் துளி விஷம்

நெஞ்சம் துடித்திடும் நாழி
நீயோ அடுத்தவன் தொழி
என்னை மறந்துபோவதும் நியாயமோ
இந்த காதல் ஒவியத்தின்
பாதை மாறியது
காலம் செய்துவிட்ட மாயமோ
ஒரு மனம் உருகுது
ஒரு மனம் விலகுது
ஏய்
---
என்னடி மீனாட்சி - சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயச்சு
---
அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கு ஒரு சிறுகதை

அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கு ஒரு சிறுகதை

கண்ணன் தனிமையிலே பாட
ராதை தன் வழியே ஓட
இந்த பிரிவை தங்குமோ என் மனம்
ஒரு நூலில் அடுகின்ற ஊஞ்சல் போன்றதடி
நாளும் மாறுகின்ற உன் மனம்
எனக்கு இன்று புரிந்தது
எவள் என்று தெரிந்தது
ஏய்
---
என்னடி மீனாட்சி - சொன்னது என்னாச்சு

என்னடி மீனாட்சி - சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு

வார்த்தை தவறி விட்டாய்.... கண்ணமா
மார்பு துடிக்குதடி