உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com
Showing posts with label உதய கீதம். Show all posts
Showing posts with label உதய கீதம். Show all posts

Sunday, June 6, 2010

உதய கீதம் - தேனே தென்பாண்டி

தேனே தென்பாண்டி மீனே
இசைத் தேனே இசைத் தேனே

தேனே தென்பாண்டி மீனே
இசைத் தேனே இசைத் தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை ஆரீராரோ நெற்றி மூன்றாம்பிறை
தாலேலலோ

தேனே தென்பாண்டி மீனே
இசைத் தேனே இசைத் தேனே
மானே இள மானே
---
மாலை வெயில் வேலையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாத வைகையில் ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாலும் உண்டு நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம்
ராஜா நீயே தான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை
---
தேனே தென்பாண்டி மீனே
இசைத் தேனே இசைத் தேனே
---
பால் கொடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே
பல் மனதைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே
பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா
தாழம் பூவை தூர வைத்தல் வாசம் விட்டு போகுமா
ராஜ நீதான் நான் எடுத்த முத்துப் பிள்ளை
---
தேனே தென்பாண்டி மீனே
இசைத் தேனே இசைத் தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை ஆரீராரோ நெற்றி மூன்றாம்பிறை
தாலேலலோ

தேனே தென்பாண்டி மீனே
இசைத் தேனே இசைத் தேனே
மானே இள மானே

உதய கீதம் - சங்கீத மேகம்

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
---
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்த வா
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்த வா
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூ மனமே...
---
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
---
உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூ மனமே...
---
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே

சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்

உதய கீதம் - பாடும் நிலாவே

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்

பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
---
நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமல் ஏன் போகுமோ
கைதான போதும் கை சேரவேன்டும்
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேரவே
--
பாடும் நிலவே தேன் கவிதை பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே
---
ஊரெங்கும் போகும் என் ராகங்களே
உன் வீடு தேடும் என் மேகங்களே
பூ மீது தேன் தூவும் காதல் வரம்
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
காவேரி வெள்ளம் கை சேர கூடும்
ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே
---
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே

உன் பாடலை நான் கேட்கிறேன்

பாமாலையை நான் கோர்க்கிறேன்

பாடும் நிலாவே

தேன் கவிதை

பூ மலரே