உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com
Showing posts with label காதல் மன்னன். Show all posts
Showing posts with label காதல் மன்னன். Show all posts

Sunday, June 6, 2010

காதல் மன்னன் - வானும் மண்ணும்

வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே

ஒரு மூங்கில் காடெரிய
சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே?

காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது போசுக்கென்று பூத்திடுதே?

ஒரு நீரோடை மீனுக்கு
கரை மேல் ஆசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ..

வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே

ஒரு மூங்கில் காடெரிய
சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே?

காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது போசுக்கென்று பூத்திடுதே?

ஒரு நீரோடை மீனுக்கு
கரை மேல் ஆசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ..
---
நியாயமா இது பாவமா
என்று சொல்ல யாரும் இங்கு இல்லை

மௌனமே மொழியானதால்
இந்த பாஷை என்பதொரு தொல்லை
அடுத்தொன்று தோன்றுதே?

ஆ வெண்ணிலா நீர் ஆற்றிலே
என்று விழுந்து பார்த்தவர்கள் இல்லை

வெண்ணிலா தங்க தேற்றிலே
இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை
இலக்கணம் பார்க்கவில்லை?

பிறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பதுவும் இல்லை

ஆ... உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை
---
ஒரு நீரோடை மீனுக்கு
கரை மேல் ஆசை வந்தது
இனி என்னன்ன நேர்ந்திடுமோ..
---
எவ்விடம் மழை தூவலாம்
என்று மேகம் யோசிப்பது உண்டோ?
ஜாதகம் சுப யோகங்கள் கண்டு
காதல் கூடுவது உண்டோ?
உணர்ச்சிக்கு பாதை உண்டோ?.

விதியினும் காதல் வலியது
இதில் வேறு பாகம் ஒன்று உண்டோ?
காதலின் திசை ஆயிரம்
அது கண்டு சொன்னவர்கள் உண்டோ?
கனவுக்கு வேலி உண்டோ?

காலம் சொல்லுவதை காதில் கேட்பதுவும் இல்லை

ஆ... ஆசை என்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை
---
ஒரு நீரோடை மீனுக்கு
கரை மேல் ஆசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ..

வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே

மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே

காதல் மன்னன் - உன்னை பார்த்த பின்பு

உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை வாதித்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னை கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே

உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
---
ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னை பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்
என்னுயிரில் நீ பாதியென்று
உன் கண்மணியில் நான் கண்டுகொண்டேன்
எத்தனை பெண்களை கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு
உறங்க சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாயோ இல்லை மறைவாயோ
யே யே யே யே யே
தன்னை தருவாயோ இல்லை கரைவாயோ
---
உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
---
நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னை தொட துணிந்தேன் என்ன துணிச்சலடி
மணமகளாய் உன்னை பார்த்த பின்னும்
உன்னை சிறையெடுக்க மனம் மரவு வேலிக்குள் நீயிருக்க
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
இமய மலை என்று தெரிந்த பின்னும்
எரும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவாயோ இல்லை மறைவாயோ
யே யே யே யே யே
தன்னை தருவாயோ இல்லை கரைவாயோ
---
உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை வாதித்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னை கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே

உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே