உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com
Showing posts with label தசாவதாரம். Show all posts
Showing posts with label தசாவதாரம். Show all posts

Monday, March 29, 2010

தசாவதாரம் - முகுந்தா முகுந்தா

முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா
முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா
வெண்ணை உண்ட வாயால் மண்ணை உண்டவா
பெண்ணை உண்ட காதல் நோய்க்கு மருந்தாக வா
முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா
என்ன செய்ய நானோ தோல் பாவைதான்
உந்தன் கைகள் ஆட்டி வைக்கும் நூல் பாவைதான்
முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா

நீ இல்லாமல் என்றும் இங்கே இயங்காது பூமி
நீ அறியா சேதி இல்லை எங்கள் கிருஷ்ண சுவாமி
பின் தொடர்ந்து அசுரர் வந்தால் புன்னகைத்து பார்ப்பாய்
கொஞ்ச நேரம் ஆட விட்டு அவர் கணக்கை தீர்ப்பாய்
உன் ஞானம் போற்றிடாத விஞ்ஞானம் ஏது
அறியாதார் கதை போலே அஞ்ஞானம் ஏது
அன்று அர்ஜுனனுக்கு நீ உரைத்தாயே பொன்னான கீதை
உன் மொழி கேட்க உருகுகிறாளே இங்கே ஓர் கோதை
வாராது போவாயோ வாசுதேவனே
வந்தாலே வாழும் இங்கு என் ஜீவனே
ஜெய்..முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா

மச்சமாக நீரில் தோன்றி மறைகள் தன்னை காத்தாய்
கூர்மமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய்
வாமணன் போல் தோற்றம் கொண்டு வானளந்து நின்றாய்
நரன் கலந்த சிம்மமாகி ஹிரணியனை கொன்றாய்
ராவணன் தன் தலையை கொய்ய ராமனாக வந்தாய்
கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய்
இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் ஆனேன்
உன் திருவடி பட்டால் திருமணமாகும் ஏந்திழை ஏங்குகிறேனே
மயில்பீலி சூடி நிற்கும் மன்னவனே
மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே
முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா

( உசுரோடு இருக்கான் நான் பெற்ற பிள்ளே
ஏனோ இன்னும் தகவல் வரலே..
வானத்தில் இருந்து வந்து உதிப்பான்
சொன்னால் கேளுங்க அசடுகளே
வாடா மன்மதா... அழகா வாடா
உடனே வாடா .... வாடா.....
கோவிந்தா கோபாலா....)

முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா
முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா
ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்...
ஆ...ஆ...ம்ம்..ம்ம்....

தசாவதாரம் - கல்லை மட்டும் கண்டால்

ஓம்.... நமோ நாராயணாய....

ஓம் வழி வாசல் வாழ் சுடலாழியும்
பல்லாண்டு படைத்தோர்க்கு உதவும்
பாஞ்சசன்யம் பல்லாண்டு

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது...( 2 )
எட்டில் ஐந்து எண் கழியும் - என்றும்
ஐந்தில் எட்டு எண் கழியாது
அஷ்ட அச்சரம் ஏற்கும் நெஞ்சு
பஞ்ச ஆச்சரம் பார்க்காது
ஊனக்கண்ணில் பார்த்தால் யாவும் குற்றம் தான்
ஞானக் கண்ணில் பார்த்தால் யாவும் சுற்றம் தான்

மந்திரமில்லை வணங்கனும் பக்தர்கள்
மஞ்சனத்துளி அகல
உன் இச்சை மண்டபத்துக்குள்ளே
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல கோடி நூறாயிரம்
நல்லாண்ட விண்ணோர்கள் மன்னர் முன்
செவ்வரளி செவ்வித்திருக்காப்பு
ஓம் ஓம்

இல்லை என்று சொன்ன பின்பும் இன்றியமையாது
தொல்லை தந்த போதும் எங்கள் தில்லை மாறாது...( ௨)
வீர சைவர்கள் முன்னால் - எங்கள்
வீர வைணவம் தோற்காது
மன்னன் சொல்லுக்கு அஞ்சி - என்றும்
மேற்கில் சூரியன் உதிக்காது
ராஜலஷ்மி நாகர் சீனிவாசன் தான்
சீனிவாசன் சேய் இந்த விஷ்ணுதாசன் நான்
நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜர் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்

நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது
நெஞ்சுக்குள்ளே வாழும் எங்கள் ஜோதி சாகாது...( 2 )
வீசும் காற்று வந்து விளக்கணைக்கும்
வெண்ணிலாவை அது அணைத்திடுமா
கொட்டும் வான்மழை நிலம் நனைக்கும்
அந்த வானம் தன்னை நனைத்திடுமா
சைவம் என்று பார்த்தால் தெய்வம் தெரியாது
தெய்வம் என்று பார்த்தால் சமயம் கிடையாது
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது
கடவுள் மட்டும் கண்டால் கல்லடி தெரியாது

தசாவதாரம் - ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்

பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்
உடல் பூமிக்கே போகட்டும்
ஹாக
இசை பூமியை ஆளட்டும்

ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்

காட்டை திறக்கும் சாவிதான் காற்று
காதை திறக்கும் சாவிதான் பாட்டு

பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும் (2)

உடல் பூமிக்கே போகட்டும்
ம்ம்ம்ம்
இசை பூமியை ஆளட்டும்

காட்டை திறக்கும் சாவிதான் காற்று
யாஅ
காதை திறக்கும் சாவிதான் பாடு

ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்


நீ என்பதை பொல்லாத
நான் என்பதை ஒன்றாக்கி
நாம் செய்வது பாடல் தான்

யார் நெஞ்சிலும் மிருகத்தின் தோல் உள்ளது
அதை மாற்றி ஆள் செய்வது பாடல் தான்

கடவுளும் கந்தசாமியும் பேசிக்கொள்ளும்
மொழி பாடல்தான்

மண்ணில் நாம் வாழ்கிற காலம் கொஞ்சம்
வாழ்வில் உன் சுவடுகள் எங்கே மிஞ்சும்

எண்ணி பாரட மானுட என்னோடு நீ பாடடா

ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்


பூ பூக்குதே அதன் வாழ்வு ஏழு நாட்களே
ஆனாலும் தேன் தந்து தான் போகுதே

நம் வாழ்கையின் வாழ்நாளை யார் கண்டது
என் நெஞ்சம் நீ வாழவே பாடுதே

வீழ்வது யார் ஆகினும் வாழ்வது நாடாகட்டும்

காலம் உன் உதடுகள் மூடும் போதும்
காற்று உன் வரிகளை மீண்டும் பாடும்

நீ பாடினால் நல்லிசை
உன் மௌனமும் மெல்லிசை

ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்

ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்
ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்

come on everybody rock with me
ஒ ஒ சனம் (come on rock with me)

ஒ ஒ சனம் ஒ ஒ

rock it rock it

ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்

come on come on come on come on

(yeah move it)
come on baby, rig it up
(rig it up)

(rig it up)
(rig it up)

(pump up the volume)
(rock it)

yeah rock it

(rock it)
(rock it)
(rock it)
(rock it)

ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்