உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com
Showing posts with label பயணங்கள் முடிவதில்லை. Show all posts
Showing posts with label பயணங்கள் முடிவதில்லை. Show all posts

Sunday, June 6, 2010

பயணங்கள் முடிவதில்லை - மணி ஓசை கேட்டு

மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோவில் சேர்ந்த பொழுது
அந்தக் கோயிலின் மணி வாசலை
இங்கு மூடுதல் முறையோ
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
---
கண்ணன் பாடும் பாடல் கேட்டு
ராதை வந்தால் ஆகாதோ
ராதையோடு ஆசைக் கண்ணன்...ஹா...
பேசக் கூடாதோ

கண்ணன் பாடும் பாடல் கேட்டு
ராதை வந்தால் ஆகதோ
ராதையோடு ஆசைக் கண்ணன்
பேசக் கூடாதோ

ராதை மனம் ஏங்கலாமோ
கண்ணன் முகம் வாடலாமோ
வாழ்க்கை மாறுமோ
நெஞ்சம் தாங்குமோ
---
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
---
பாதை மாறிப் போகும்போது
ஊரும் வந்தே சேராது
தாளம் மாறிப் போடும்போது...ஆ..
ராகம் தோன்...

பாதை மாறிப் போகும்போது
ஊரும் வந்தே சேராது

தாளம் மாறிப் போடும்போது
ராகம் தோன்றாது

பாடும் புது வீணை இங்கே

ராகம் அதில் மாறும் அங்கே
காலம் மாறுமோ
தாளம் சேருமோ
---
மணி ஓசை கேட்டு எழுந்து

நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

திருத்தேரில் நானும் அமர்ந்து

ஒரு கோவில் சேர்ந்த பொழுது

அந்தக் கோயிலின் மணி வாசலை
இங்கு மூடுதல் முறையோ

மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து

பயணங்கள் முடிவதில்லை - இளைய நிலா பொழிகிறதே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக்காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக்காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
---
வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரும் நடை பழகும்
வரும் வழியில் பனி மழையில் பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரும் நடை பழகும்
வான வீதியில் மேக ஊர்வலம்
காணும்போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்
---
இளைய நிலா பொழிகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக்காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே
---
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ
நீல வானிலே வெள்ளி ஓடைகள்
ஓடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்
---
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே
விழாக்காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே