உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com
Showing posts with label ராமன் தேடிய சீதை. Show all posts
Showing posts with label ராமன் தேடிய சீதை. Show all posts

Saturday, April 10, 2010

ராமன் தேடிய சீதை - இப்பவே இப்பவே பார்க்கணும்

இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

கண்ணை மூடி உன்னை கண்ட அப்பவே அப்பவே
கை வளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே

இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

===

வெள்ளச் சேதம் வந்தால் கூட தப்பிக் கொள்ளலாம்
உள்ளச் சேதம் வந்து விட்டால் என்ன செய்வது

முள்ளை காலில் ஏற்றி கொண்டால் ரத்தம் மட்டும் தான்
உன்னை நெஞ்சில் ஏற்றி கொண்டேன் நித்தம் யுத்தம் தான்

சொல்லித் தீரா இன்பம் கண்டு
எந்தன் நெஞ்சு கூத்தாட

மின்னல் கண்ட தாழை போல
உன்னால் நானும் பூத்தாட

உன்னை கண்டேன் என்னை காணோம்
என்னை காண உன்னை நானும்

===

இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

===

எந்தன் வாழ்வில் வந்ததின்று நல்ல திருப்பம்
இனி உந்தன் கையை பற்றி கொண்டே செல்ல விருப்பம்

நெஞ்ச வயல் எங்கும் உன்னை நட்டு வைக்கிறேன்
நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்

உன்னை காண நானும் வந்தால்
சாலை எல்லாம் பூஞ்சோலை

உன்னை நீங்கி போகும் நேரம்
சோலை கூட தார் பாலை

மண்ணுக்குள்ளே வேரை போல
நெஞ்சுகுள்ளே நீ தான் நீ தான்

===

இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே

கண்ணுக்குள்ள உன்னை கண்ட அப்பவே அப்பவே
கை வளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே

ராமன் தேடிய சீதை - என்ன புள்ள செஞ்ச

என்ன புள்ள செஞ்ச நீ
ஹோ பாவி பையன் நெஞ்ச நீ

என்ன புள்ள செஞ்ச நீ
ஹோ பாவி பையன் நெஞ்ச நீ

பார்கையில சொக்க வெச்ச
பறக்க தான் ரெக்க வெச்ச

திக்க வெச்ச திணர வெச்ச
திசையை தான் உணர வெச்ச

தெக்க வெச்ச வள்ளுவனை
ஒத்தையில நிக்க வெச்ச

என்ன புள்ள செஞ்ச நீ
ஹோ பாவி பையன் நெஞ்ச நீ

===

கொள்ளைக்காரன் நானே
கொள்ளை ஆகி போனேன்
ஹே
மிச்சம் மீதி ஏதும் இல்ல
எல்லாம் தொலைச்சேனே

தேதி போல நாளும்
தேஞ்சு போகும் தேகம்
நான் தேஞ்ச போதும்
வளருதே காதல் தேயாமா

கண்ணீரில் உண்டாகும் நூல்கள்
ஏன் தண்ணீரில் வைக்கின்ற மாயம்
உன்னால வாழ்க்கின்ற நெஞ்சு
ஏன் உன்னால ஏன் இந்த காயம்

என் வாழ்கையே நீ வந்து தான்
ஆரம் நதி ஆகும்

என்ன புள்ள செஞ்ச நீ
பாவி பையன் நெஞ்ச நீ

===

ஒன்ன பார்த்த வேள
உடம்பும் செங்கல் சூல
ஹே
செம்பரப்பு அருவியாய்
நீயே வந்தாயே

பானை மண்ண பிசஞ்சே
பானை போல வளஞ்சே
ஹே
என்னை நீயே என்னிடமே
மாத்தி தந்தாயே

எப்பொதும் உன் பேரை சொல்லி
என் உள் நாக்கு தண்டோரா போடும்
உப்பாகி மீனாக தானே
அப்போதும் உன் பிம்பம் ஆடும்

என் வாழ்கையே நீ வந்து தான்
ஆரம் நதி ஆகும்

===

என்ன புள்ள செஞ்ச நீ
பாவி பையன் நெஞ்ச நீ

என்ன புள்ள செஞ்ச நீ
பாவி பையன் நெஞ்ச நீ

பார்கையில சொக்க வெச்ச
பறக்க தான் ரெக்க வெச்ச

திக்க வெச்ச திணர வெச்ச
திசையை தான் உணர வெச்ச

தெக்க வெச்ச வள்ளுவனை
ஒத்தையில நிக்க வெச்ச