உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Friday, April 9, 2010

ஆஹா - முதன் முதலில் பார்த்தேன்

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை
காதல் போலே ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா

நந்தவனம் இதோ இங்கே தான்
நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால் தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்
நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
முதல் பார்வை நெஞ்சில் என்றும்
உயிர் வாழுமே உயிர் வாழுமே

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை
காதல் போலே ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா


ஏழு ஸ்வரம் எட்டாய் ஆதாதோ
நான் கொண்ட காதலின் ஆழத்தை பாட
தேக எங்கும் கண்கள் தோன்றாதோ
நீ என்னை பார்க்கையில் நாணத்தை மூட
இருதயம் முறைப்படி துடிக்கவில்லை
இதற்கு முன் எனக்கிது நிசழ்ந்ததில்லை
நான் கண்ட மாற்றம் எல்லாம் நீ தந்தது
நீ தந்தது

No comments:

Post a Comment