உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Saturday, April 10, 2010

நினைத்தாலே இனிக்கும் - நண்பனை பார்த்த தேதி

நண்பனை பார்த்த தேதி மட்டும்
ஒட்டி கொண்டதென் ஞாபகத்தில்
என் உயிர் வாழும் காலமெல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்

உலகத்தில் பிடித்தது எதுவென்று என்னை கேட்டால்
ஹோ ஹோ ஹோ...
என் கல்லூரி வாழ்க்கையை காட்டிடுவேன்
என் அடுத்த ஜென்மத்தில் இங்கே மரமாவேன்
ஓ ஓ ஹோ..
ந ன ந..
ஓ ஓ ஹோ..
ந ன ந..

நண்பனை பார்த்த தேதி மட்டும்
ஒட்டி கொண்டதென் ஞாபகத்தில்
என் உயிர் வாழும் காலமெல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்
---
சிறகு இல்லை வானம் இல்லை
வெறும் தரையிலும் நாங்கள் பறப்போம்

இளமை இது ஒரு முறைதான்
துளி மிச்சம் இல்லாமல் ரசிப்போம்

கவலை இல்லை கபடம் இல்லை
நாங்கள் கடவுளுக்கே வரம் கொடுப்போம்

எரி மலையோ பெரும் மழையோ
எங்கள் நெஞ்சை நிமிர்த்திதான் நடப்போம்

வரும் காலம் நமதாகும்
வரலாறு படைப்போம்
உறங்காமல் அதற்காக உழைப்போம்
ஓ ஓ ஹோ..
ந ன ந..
ஓ ஓ ஹோ..
ந ன ந..
---
நண்பனை பார்த்த தேதி மட்டும்
ஒட்டி கொண்டதென் ஞாபகத்தில்
என் உயிர் வாழும் காலமெல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்
---
வித விதமாய் கனவுகளை
தினம் நெஞ்சினிலே நாங்கள் சுமப்போம்

பயம் அறியா பருவம் இது
நாங்கள் நினைப்பதெல்லாம் செய்து முடிப்போம்

சுமைகள் என்று ஏதும் இல்லை
இங்கு ஜாதி மதங்களை மறப்போம்

பெண்கள் என்றும் ஆண்கள் என்றும்
உள்ள பாகு பாட்டையும் வெறுப்போம்

மழை தூவும் வெய்யில் நேரம்
அது போலே மனது
மனம் போலே தடுமாறும் வயது
---
நண்பனை பார்த்த தேதி மட்டும்
ஒட்டி கொண்டதென் ஞாபகத்தில்
என் உயிர் வாழும் காலமெல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்

உலகத்தில் பிடித்தது எதுவென்று என்னை கேட்டால்
ஹோ ஹோ ஹோ...
என் கல்லூரி வாழ்க்கையை காட்டிடுவேன்
என் அடுத்த ஜென்மத்தில் இங்கே மரமாவேன்

No comments:

Post a Comment