அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிறாய்
எதிரில் நீயும் வந்தால் என் உயிரை கேட்கிறாய்
அடி உன் முகம் கண்டால் என் இமை ரெண்டும் கைகள் தட்டுதே
அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்
நீயும் நானும் ஒன்றாய் போகும் போது
நீளும் பாதை இன்னும் வேண்டும் என்று
நெஞ்சம் ஏங்குதடி
வானவில்லாய் நீயும் வந்த போது
எந்தன் கருப்பு வெள்ளை கண்கள் ரெண்டும்
கலராய் மாறுதடி
என் வீடு பூவெல்லாம் உன் வீடு திசை பார்க்கும்
என் வாசல் உன் பாதம் எங்கென கேட்குதடி
அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்
ஏ வானம் மீது போகும் மேகம் எல்லாம்
உனது உருவம் போல வடிவம் காட்ட கண்கள் மயங்குதடி
பூவில் ஆடும் பட்டாம்பூச்சி கூட
நீயும் நடந்து கொண்டே பறந்து செல்லும் அழகை ரசிக்குதடி
உன் செய்கை ஒவ்வொன்றும் என் காதல் அர்த்தங்கள்
நாள் தோறும் நான் சேர்க்கும் ஞாபக சின்னங்கள்
அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment