ஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஓ திவ்யா ஓ திவ்யா நீ கவிபாடும் புது நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா
கண்கள் ஓரமாய் வந்து
என் ஆயுள் ரேகையில் நின்று
தினம் தவம் செய்யும் வரம் சேர்ப்பாயா
உன் பாத கொலுசுகள் ஓசை
அதை பதிவு செய்யவே ஆசை
திருமுகம் காட்டி உயிர் காப்பாயா
ஓ திவ்யா ஓ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஓ திவ்யா ஓ திவ்யா நீ கவிபாடும் புது நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா
-
எனக்காக என்னை பற்றி யோசிக்கத்தான் நீ வந்தாய்
அழகாக என்னை மாற்றி உருவம் நீ தந்தாய்
ஒஹ் ஹோ ஹோ
வெறும் கல்லாய் வாழும் என்னை தொட்டு சிற்பம் செய்கிறாய்
சிறு நூலாய் ஆகும் என்னால் அள்ளி ஆடை நெய்கிறாய்
இயல்பாக பேசும்போது எனக்காய் தெரியாமல் தான்
உன் பெயரை சொல்லி போகிறேன்
இனிப்பான சுமைகள் தூக்கி சுவர் ஏறும் எரும்பை போல
உன் காதல் ஏந்தி செல்கிறேன்
-
ஒ திவ்யா ஒ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஒ திவ்யா ஒ திவ்யா நீ கவிபாடும் புது நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா
-
முதல் பார்வை அதிலே சிக்கி இன்னும் வெளியே வரவில்லை
அதற்குள்ளாய் மீண்டும் பார்த்தாய் ஐயோ முடியவில்லை
ஒஹ் ஹோ ஹோ
உன் நாசி தவழும் மூச்சில் உயிரும் விக்கி நின்றதே
உன் நாபி கமலம் அங்கே கண்கள் சிக்கி கொண்டதாய்
மெதுவான மஞ்சள் பெண்ணே ருதுவான கொஞ்சல் கண்ணே
உனக்காக தானே வாழ்கிறேன்
நூற்றாண்டு கடிதம் போலே உதிர்கின்ற எந்தன் மனசை
உனக்ககா திறந்தும் வைக்கிறேன்
ஓ திவ்யா ஓ திவ்யா நீ கவிபாடும் புது நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா
கண்கள் ஓரமாய் வந்து
என் ஆயுள் ரேகையில் நின்று
தினம் தவம் செய்யும் வரம் சேர்ப்பாயா
உன் பாத கொலுசுகள் ஓசை
அதை பதிவு செய்யவே ஆசை
திருமுகம் காட்டி உயிர் காப்பாயா
Friday, April 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment