உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Saturday, April 10, 2010

நாடோடிகள் - உலகில் எந்த காதல்

உலகில் எந்த காதல்
உடனே ஜெய்த்தது
வலிகள் தாங்கும் காதல்
மிகவும் வலியது

காதல் தோற்றதாய் கதைகள் ஏது
தோற்றால் தோற்றது காதல் ஆகாது
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தப்பர்த்தம்

உலகில் எந்த காதல்
உடனே ஜெய்த்தது
வலிகள் தாங்கும் காதல்
மிகவும் வலியது

நினைவுகளாலே நிச்சியதார்தம்
நடந்தது அவனோடு
அவனை அல்லாது அடுத்தவன் மாலை
ஏற்பது பெரும்பாடு
ஒரு புறம் தலைவன்
மறுபுறம் தகப்பன்
இரு கொள்ளி எரும்பானாள்
பாசத்துகாக
காதாலை தொலைத்து
ஆலையில் கரும்பானாள்
யார் காரணம்
ஆஹா...
யார் பாவம் யாரை சேரும்
யார் தான் சொல்ல
கண்ணீர் வார்த்தாள் கன்னி மானே
சுற்றம் செய்த குற்றம் தானே

உயிரில் பூக்கும் காதல்
உணர்வின் வாழ்நிலை
உணர்வை பார்ப்பதேது
உறவின் சூழ்நிலை

மனமென்னும் குளத்தில்
விழி என்னும் கல்லை
முதல் முதல் எரிந்தாளே
அலைஅலையாக ஆசைகள் எழும்ப
அவள் வசம் விழுந்தானே
நதி வழி போனால்
கரை வரக்கூடும்
விதி வழி போனானே
விதை ஒன்று போட
வேர் ஒன்று முளைத்த
கதை என்று ஆனானே
என் சொல்வது
என் சொல்வது
தான் கொண்ட நட்புக்காக
தானே தேய்ந்தான்
கற்பை போலே நட்பை காத்தான்
காதல் தோற்க்கும்
என்றா பார்த்தான்

உலகில் எந்த காதல்
உடனே ஜெய்த்தது
வலிகள் தாங்கும் காதல்
மிகவும் வலியது

காதல் தோற்றதாய் கதைகள் ஏது
தோற்றால் தோற்றது காதல் ஆகாது
எல்லாமே சந்தர்ப்பம்
கற்பிக்கும் தப்பர்த்தம்

No comments:

Post a Comment