உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Thursday, April 8, 2010

அங்காடி தெரு - அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணை இல்லை
அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணை இல்லை
அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளை படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணை இல்லை
அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை


அவள் நாய் குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவல் இருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போல பிறக்கவில்லை

அவள் கூந்தல் ஒன்றும் நீளம் இல்லை
அந்த காற்றில் துலைந்து மீளவில்லை
அவள் கை விரல் மோதிரம் தங்கமில்லை
கை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை
எனக்கு எதுவும் இல்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணை இல்லை
அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை

ஆஅஹ்....

அவள் பட்டு புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும் போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரை போலே வேறு இல்லை

அவள் வாசம் ரோஜா வாசம் இல்லை
அவள் இல்லாமல் சுவாசம் இல்லை
அவள் சொந்தம் பந்தம் எதுவும் இல்லை
அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை
அவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை
எனக்கு எதுவும் இல்லை

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணை இல்லை
அவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை
ஆனால் அது ஒரு குறை இல்லை

அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளை படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை

No comments:

Post a Comment