பூ பறிக்க சொல்லி பூவா கேட்டுகொள்ளும்
நான் பறித்துகொண்டால் கூடாதென்றா சொல்லும்
பூ பறிக்க சொல்லி பூவா கேட்டுகொள்ளும்
நான் பறித்துகொண்டால் கூடாதென்றா சொல்லும்
மை விழி சிலென்ற மார்கழி
உன் மொழி சங்கீத செம்மொழி
கை வழி வராதோ பைங்கிளி
கொஞ்சலாம் நெஞ்சோடு கொஞ்சம் நாழி
அன்பான சினேகிதா சின்னத சேட்டை செய்யேன்டா
அச்சாரம் என்பதை இப்போவே பொட்டு வைய்யேன்டா
அன்பான சினேகிதி சொல்லை நான் தாண்டமாட்டேனே
ஆனாலும் சுள்ளென உணர்ச்சியை தூண்டமாட்டேனே
-
புன்னகை பூவை வீசி எனை பூமியில் சாய்த்தாயே
மண்மடி சேரும் முன்னை எனை உன் மடி சேர்த்தாயே
என் விழி தூக்கம் பார்த்து இங்கு ஏழெட்டு நாள் ஆச்சு
கண் இமை நான்கும் வேர்த்து நிற்க காரணம் நீயாச்சு
யார் யார்க்கு யாரோ யார் சொல்லுவாரோ
செம்மண்ணும் நீரும் சேர்ந்தால் பின் வேறோ
கனவில் நினைக்கவில்லை கால்கள் நடக்கும் முல்லை
எனக்கு கிடைக்கும் என நான்
-
அன்பான சினேகிதா சின்னத சேட்டை செய்யேன்டா
அச்சாரம் என்பதை இப்போவே பொட்டு வைய்யேன்டா
அன்பான சினேகிதி சொல்லை நான் தாண்டமாட்டேனே
ஆனாலும் சுள்ளென உணர்ச்சியை தூண்டமாட்டேனே
-
காரணம் இன்றி தேகம் மழை காலத்தில் வேர்க்கிறதே
மையலை என்ன சொல்ல அது வெய்யிலை வார்க்கிறதே
வெப்பத்தில் வாடும் போது இந்த தெப்பத்தில் நீ ஏறு
எப்பவும் காதல் வந்தால் இங்கு ஆயிரம் கோளாறு
நீ இன்றி வாழ்ந்தால் நீர் தேடும் வேர்தான்
நாம் ஒன்று சேர்ந்தால் வாழ்த்தாதோ ஊர்தான்
எனக்கு எனக்கு இன்று இருக்கும் அழகு மொத்தம்
உனக்கு உனக்கு இனிமேல்
-
அன்பான சினேகிதா சின்னத சேட்டை செய்யேன்டா
அச்சாரம் என்பதை இப்போவே பொட்டு வைய்யேன்டி
பூ பறிக்க சொல்லி பூவா கேட்டுகொள்ளும்
நான் பறித்துகொண்டால் கூடாதென்றா சொல்லும்
பூ பறிக்க சொல்லி பூவா கேட்டுகொள்ளும்
நான் பறித்துகொண்டால் கூடாதென்றா சொல்லும்
Friday, April 9, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment