கடலோரம் ஒரு ஊரு
ஒரு ஊரில் ஒரு தோப்பு
ஒரு தோப்பில் ஒரு பூவு
ஒரு பூவில் ஒரு வண்டு
முதல் முதல் வண்டொன்று தீண்டியதும்
விரல் பட்ட பூ வியர்த்ததோ
தொட தொட மோகங்கள் தூண்டியதும்
சுட சுட தேன் வார்த்ததோ
மெதுவா மெதுவா அனுசரி
இதமா பதமா அனுபவி
எது என் விருப்பம் கொடு கொடு
இருக்கும் நாணம் விடு விடு
----
கன்னங்களை காட்டு
கையெழுத்து போட்டிடவேண்டும்
ஈர உதடுகளால்
பல்லு படும் லேசா கேலி
பேச்சு கேட்டிட நேரும்
ஊரு உறவுகளால்
பாட்டன் பூட்டன் செஞ்ச தவறு இது
யாரு நம்ம இங்க தடுக்கறது
ஓசை கேட்காமல் முத்தம் வைக்கவோ
இருந்தும் எதற்கு இடையில
இரு கை மேயும் இடையில
இடை தான் எனக்கோர் நூலகம்
வழங்கும் கவிதை வாசகம்
ஓ .... பள்ளிக்கூட சிநேகம்
பள்ளியறை பாய் வரை போகும்
யோகம் நமக்கிருக்கு
கட்டுகளைப் போட்டு
நட்டு வச்ச வேலி தாண்டி
காதல் ஜெயிச்சிருக்கு
புள்ளி வைக்க இந்த பூமி உண்டு
கோலம் போட அந்த சாமி உண்டு
இங்கே.. நீ இன்றி நானும் இல்லையே
காத்தா இருக்க மூச்சில
மொழியா இருக்க பேச்சில
துணியா இருப்பேன் இடையில
துணையா இருப்பேன் நடையில
கடலோரம் ஒரு ஊரு
ஒரு ஊரில் ஒரு தோப்பு
ஒரு தோப்பில் ஒரு பூவு
ஒரு பூவில் ஒரு வண்டு
முதல் முதல் வண்டொன்று தீண்டியதும்
விரல் பட்ட பூ வியர்த்ததோ
தொட தொட மோகங்கள் தூண்டியதும்
சுட சுட தேன் வார்த்ததோ
மெதுவா மெதுவா அனுசரி
இதமா பதமா அனுபவி
எது என் விருப்பம் கொடு கொடு
இருக்கும் நாணம் விடு விடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment