உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Friday, June 11, 2010

ஆறு - பாக்காத என்ன

பாக்காத என்ன பாக்காத
குத்தும் பார்வையால என்ன பாக்காத
போகாத தள்ளி போகாத
என்ன விட்டு விட்டு தள்ளி தள்ளி போகாத
கொடுத்தத திருப்பி நீ கேட்க
காதலும் கடனும் இல்ல
கூட்டத்தில் நின்னு பாத்து கொள்ள
நடப்பதும் கூத்தும் இல்ல

பாக்காத என்ன பாக்காத
குத்தும் பார்வையால என்ன பாக்காத
போகாத தள்ளி போகாத
என்ன விட்டு விட்டு தள்ளி தள்ளி போகாத
---
வேணாம் வேணான்னு நான் இருந்தேன்
நீதானே என்ன இழுத்து விட்டே
போடி போடின்னு நான் தொரத்த
வம்புல நீதானே மாடிவிட்ட
நல்ல இருந்த என் மனச
நாறாக திருச்சுபுட்ட
கருப்பா இருந்த என் இரவ
கலர மாத்திபுட்ட
என்னுடன் நடந்த என் நிழல
தனியா நடக்க விட்ட
உள்ள இருந்த என் உசுர
வெளிய மிதக்க விட்ட
---
பாக்காத என்ன பாக்காத
குத்தும் பார்வையால என்ன பாக்காத
போகாத தள்ளி போகாத
என்ன விட்டு விட்டு தள்ளி தள்ளி போகாத
---
வேணாம் வேணான்னு நினைக்கலையே
நானும் உன்ன வெறுக்கலையே
காணோம் காணோன்னு நீ தேட
காதல் ஒன்னும் தொலையலையே
ஒன்ன இருந்த ஞாபகத்த
நெஞ்சோடு சேர்த்துவெச்சேன்
தனியா இருக்கும் வலிய மட்டும்
தனியா அனுபவிச்சேன்
பறவையின் சிறகுகள் பிரிஞ்சாதான்
வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும்
காதல் அதிகரிக்கும்
---
பாக்காத என்ன பாக்காத
குத்தும் பார்வையால என்ன பாக்காத
போகாத தள்ளி போகாத
என்ன விட்டு விட்டு தள்ளி தள்ளி போகாத
கொடுத்தத திருப்பி நான் கேட்க
கடனா கொடுக்கலையே
உனக்குள்ளே தானே நான் இருக்கேன்
உனக்கு அது புரியலையே

சந்திரமுகி - அத்திந்தோம் திந்தியும்

அத்திந்தோம்..... திந்தியும் தோந்தன..... திந்தாதி நொம்தோம்.......
தகதிதோம்.....திந்தியும் தோந்தன..... திந்தாதி தொம்தோம்.......

அத்திந்தோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்
தகதிதோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்

ஆடாதா சவ்வாது மலை ஆடிடும் பொம்மி
ஆண்டவன தாலாட்டும் இசை கேளடி பொம்மி
என் பாட்டு வந்தாலே மனம் துள்ளிடும் பொம்மி
அவன் பாட்டு இல்லாத இடம் எங்கடி பொம்மி
முக்கண்ணு முத்தாக தந்த பாட்டு படிச்சேன்
பாட்டாலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன்

அத்திந்தோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்
தகதிதோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்
திந்தாதி நொம்தோம்.....திந்தாதி நொம்தோம்

ஹே பொம்மி ஹே பொம்மி
---
வட்ட வட்ட மோட்டுகளை
தட்ட தட்ட வந்ததம்மா நதி காத்து .....ஒ.......நதி காத்து
மொட்டு மொட்டு மெல்ல மெல்ல
மெட்டு மெட்டு தட்டுதம்மா ஸ்ருதி பார்த்து ஸ்ருதி பார்த்து
ஹே.....
ஆட வைக்கணும் பாட்டு
சும்மா அசைய வைக்கணும் பாட்டு

கேட்க வைக்கணும் பாட்டு
நல்ல கிறங்க வைக்கணும் பாட்டு
இந்த பாட்டு சத்தம்
கேட்டு சுற்றும் பூமி எப்போதும்....ம்
---
அத்திந்தோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்
தகதிதோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்
---
சின்ன சின்ன தொட்டில் கட்டி
அம்மா சொல்லும் ஆரிராரோ இசை தானே.....ஒ..... இசை தானே
ஆணும் பெண்ணும் கட்டில் கட்டி
ஆசை மெட்டு கட்டுறதும் .....இசை தானே..ஒ..... இசை தானே
ஹே........ஆறு மனமே ஆறு .......
இங்கு அனைத்தும் அறிந்தது யாரு

அறிவை திறந்து பாரு
அதில் இல்லாததை சேரு
எல்லாம் தெரிஞ்ச எல்லாம்
அறிஞ்ச ஆளே இல்லையம்மா
---
அத்திந்தோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்
தகதிதோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்

ஆடாதா சவ்வாது மலை ஆடிடும் பொம்மி
ஆண்டவன தாலாட்டும் இசை கேளடி பொம்மி
என் பாட்டு வந்தாலே மனம் துள்ளிடும் பொம்மி
அவன் பாட்டு இல்லாத இடம் எங்கடி பொம்மி
முக்கண்ணு முத்தாக தந்த பாட்டு படிச்சேன்
பாட்டாலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன்

அத்திந்தோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்
தகதிதோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்

சந்திரமுகி - கொஞ்ச நேரம்

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூரல் போடாதா

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூரல் போடாதா

கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம் எல்லை மீற கூடாதா
இந்த நேரம் இன்ப நேரம் இன்னும் கொஞ்சம் நீளாதா.....

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாத
அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூரல் போடாதா
---
கண்ணில் ஓர் அழகு கையில் நூறு அழகு உன்னால் பூமி அழகே

உன்னில் நான் அழகு என்னில் நீ அழகு நம்மால் யாவும் அழகே

ஒ ஒ....கண்ணதாசன் பாடல் வரி போல கொண்ட காதல் வாழும் விழியாக
கம்பன் பாடிபோன தமில் போல எந்தனாளும் தேகம் நலமாக

வழி நீயாக....வயல் நானாக....வெல்லமை நீ
ஹா ஆ ஆ
---
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூரல் போடாதா
---
கொக்கி போடும் விழி கொத்தி போகும் இதழ் நித்தம் கோலம் இடுமா

மக்கள் யாவரையும் அன்பில் ஆளுகிற, உன்னை போல வருமா

வெளி வேசம் போட தெரியாமல் என்னதாசை கூடதடுமாறும்

ம் ஹும் ...பல கோடி பேரின் அபிமானம் உன்னகாக ஏங்கும் எதிர்காலம்

நீ என்னோடு நான் உன்னோடு...மெய் தானே.... இது
ஹா ஆ
---
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூரல் போடாதா

கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம் எல்லை மீற கூடாதா
இந்த நேரம் இன்ப நேரம் இன்னும் கொஞ்சம் நீளாதா..

தாஸ் - சாமிகிட்ட சொல்லி புட்டேன்

சாமிகிட்ட சொல்லி புட்டேன்
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்

ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலென்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்
சுத்தமா நீ நானும் பார்த்துக்கவே முடியலென்னு
கனவுக்குள்ள பார்த்துகிட்டோம் ....

சாமிகிட்ட சொல்லி புட்டேன்
உன்ன நெஞ்சில் வச்சு கிட்டேன்

ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலென்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்
சுத்தமா நீ நானும் பார்த்துக்கவே முடியலென்னு
கனவுக்குள்ள பார்த்துகிட்டோம் ..

ஒரு கோடி புள்ளி வச்ச
நான் போட்ட காதல் கோலம்
ஒரு பாதி முடியும் முன்னே
அழிச்சிரிச்சு காலம் காலம்
இன்னோரு ஜென்மம் நான் மறுபடி பொறந்து வந்து
உனக்காக காத்திருப்பேன் ...
அப்பவும் சேராமல் இருவரும் பிரியணுமுன..
பொறக்காமல் போயிடுவேன்......

சாமிகிட்ட.....அ சொல்லி புட்டேன்....
சாமிகிட்ட.....அ சொல்லி புட்டேன்....

சாமிகிட்ட சொல்லி புட்டேன்
உன்ன நெஞ்சில் வச்சு கிட்டேன்

ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலென்னு
மனசுக்குள்ளெ பேசிக்கிட்டோம்
சுத்தமா நீ நானும் பார்த்துக்கவே முடியலென்னு
கனவுக்குள்ளெ பார்த்துகிட்டோம் ..
---
தெப்ப குளத்தில் படிஞ்ச பாசி ...
கல்லெரிஞ்ச கலையும்... கலையும்
நெஞ்ச குளத்தில் படிஞ்ச காதல்
எந்த நெருப்பில் எரியும்... எரியும் !!
நீ போன பாத மேலே....
சருகாக கடந்த சுகமா ?
உன்னோட ஞாபகம் எல்லாம்
மனசுக்குள்ள இருக்கும் ரணமா ?
கட்டு காவல் மீறி வர
காதல் நெஞ்சு கெஞ்சுதே
---
சாமிகிட்ட சொல்லி புட்டேன்
உன்ன நெஞ்சில் வச்சு கிட்டேன்

ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலென்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்
சுத்தமா நீ நானும் பார்த்துக்கவே முடியலென்னு
கனவுக்குள்ள பார்த்துகிட்டோம் ..
---
மனசுக்குள்ள பூட்டி மறச்ச
அப்ப எதுக்கு வெளியில சிரிச்ச
கனவுக்குள்ள ஒடி புடிச்ச
நெசத்திலதான் தயங்கி நடிச்ச
ஆடி போடி பயிந்தாங்கோளி ....
எதுக்காக ஊமை ஜாட
நீ இருந்த மானச அள்ளி
எந்த தீயில் நானும் போட
உன்னை என்னை கேட்டுகிட்ட காதல் நெஞ்சை தட்டிச்சு ?
---

சாமிகிட்ட சொல்லி புட்டேன்
உன்ன நெஞ்சில் வச்சு கிட்டேன்

ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலென்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்
சுத்தமா நீ நானும் பார்த்துக்கவே முடியலென்னு
கனவுக்குள்ள பார்த்துகிட்டோம் ..

சாமிகிட்ட சொல்லி புட்டேன்
சாமிகிட்ட சொல்லி புட்டேன்..

கண்ட நாள் முதல் - மேற்கே மேற்கே

லை லை லை லை லை லை லை லாலகி லை

மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே

சுடும் வெய்யில் கோடை காலம்
கடும் பனி வாடை காலம்
இரண்டுக்கும் நடுவே ஏதும்
காலம் உள்ளதா?
இலை உதிர் காலம் தீர்ந்து
எழுந்திடும் மண்ணின் வாசம்
முதல் மழை காலம் என்றே
நெஞ்சம் சொல்லுதே

ஓ மின்னலும் மின்னலும்
நேற்று வரை பிரிந்தது ஏனோ
பின்னலாய் பின்னலாய்
இன்றுடன் பிணைந்திட தானோ
லை லை லை லை லை லால லை லை லை
மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே
---
ஓ கோபம் கொள்ளும் நேரம்
வானம் எல்லாம் மேகம்
காணாமலே போகும் ஒரே நிலா
ஓ கோபம் தீரும் நேரம்
மேகம் இல்லா வானம்
பௌர்ணமியாய் தோன்றும் அதே நிலா

இனி எதிரிகள் என்றே எவருமில்லை
பூக்களை விரும்பா வேர்களில்லை
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே
இது நீரின் தோளில் கை போடும்
ஒரு சின்ன தீயின் கதையாகும்
திரைகள் இனிமேல் தேவை இல்லையே
---
மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே
லை லை லை லை லை லை லை லை லை லை லை...
---
வாசல் கதவை யாரோ
தட்டும் ஓசை கேட்டால்
நீதானென்று பார்தேனடி சகி
பெண்கள் கூட்டம் வந்தால்
எங்கே நீயும் என்றே
இப்பொதெல்லாம் தேடும் எந்தன் விழி

இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ
காற்றே சிறகாய் விரிந்திடுமோ
நிலவின் முதுகை தீண்டும் வேகமோ
அட,தேவைகள் இல்லை என்றாலும்
வாய் உதவிகள் கேடு மன்றாடும்
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ
---
மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே
லை லை லை லை லை லை லை லை லை லை லை...
ஓ மின்னலும் மின்னலும்
நேற்று வரை பிரிந்தது ஏனோ
பின்னலாய் பின்னலாய்
இன்றுடன் பிணைந்திட தானோ

கண்ட நாள் முதல் - உன் பனி துளி

கரு கரு கரு கரு
கண்ணு பட்டு ...
வாடிவிடும் வாசமல்லி
சந்தனதை பூசிவிடுங்க
அடுத்தது அடுத்தது ...
எப்போவென்னு மாமியாரு கேட்கும் முன்னே..?
அரை டஜன் பெத்து கொடுங்க....!!

தக தக தக தக
தங்க சிலை தவிக்குது
வெக்கதில போதும் அதை விட்டுவிடுங்க!!
ஆரிராரோ ஆரிராரோ --நாளைக்கினு
தேவைபடும் தாலாட்டுல
ஒன்னு ரெண்டு கத்துகொடுங்க...

உன் பனி துளி பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ..?
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ..?
இது நனவாய் தோன்றும் கனவு
இது காலையில் தோன்றும் நிலவு
இது கண்ணை கண்ணை பரித்து
வெளிச்சம் தரும் இரவு

காதலா காதலா எண்ணவும் கூசுதே
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே..

உன் பனி துளி பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ..?
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ..?

கரு கரு கரு கரு
கண்ணு பட்டு ...
வாடிவிடும் வாசமல்லி
சந்தனதை பூசிவிடுங்க
அடுத்தது அடுத்தது ...
எப்போவென்னு மாமியாரு கேட்கும் முன்னே..?
அரை டஜன் பெத்து கொடுங்க....!!

தக தக தக தக
தங்க சிலை தவிக்குது
வெக்கதில போதும் அதை விட்டுவிடுங்க!!
ஆரிராரோ ஆரிராரோ --நாளைக்கினு
தேவைபடும் தாலாட்டுல
ஒன்னு ரெண்டு கத்துகொடுங்க...
---
விரல்களும் நகங்களும்
தொட்டு கொண்ட நேரங்கள்

எண்ணி அதை பார்த்ததில்லை
என்ற போதும் நூறுகள்

ஏதோ ஒரு தென்றல் மோதி
மெல்ல மெல்ல மாறினோம்

ஓ... உன்னை நானும் என்னை நீயும் எங்கே என்று தேடினோம்..?

நம்மை சுற்றி கூட்டம் வந்தும்...
தனியானோம்--
தனிமையில் நெஞ்சுக்குளே பேசலானோம்


பேசும் போதே --பேசும் போதே--
மௌனம் ஆனோம்!!
---
உன் பனி துளி பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ..?
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ..?
---
முகத்திரைகுள்ளே நின்று..
கண்ணாம் பூச்சி ஆடினாய்..

பொய்யால் ஒரு மாலை கட்டி ..
பூசை செய்து சூடினாய்

நிழல்களின் உள்ளே உள்ள
நிஜங்களை தேடினேன்

நீயாய் அதை சொல்வாய்
என நித்தமும் நான் வாடினேன்

சொல்ல நினைத்தேன் ...ஆனால் வார்த்தை இல்லை
உன்னை விட்டால் யாரும் எந்தன் சொந்தம் இல்லை

சொந்தம் என்று யாரும் இனி தேவை இல்லை...
-
உன் பனி துளி பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ..?
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ..?
இது நனவாய் தோன்றும் கனவு
இது காலையில் தோன்றும் நிலவு
இது கண்ணை கண்ணை பரித்து
வெளிச்சம் தரும் இரவு

காதலா காதலா எண்ணவும் கூசுதே
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே..

உன் பனி துளி பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ..?
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ..?

Thursday, June 10, 2010

ஒரு கல்லூரியின் கதை - காதல் என்பது

காதல் என்பது கடவுள் அல்லவா
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா

காதல் என்றால் பொய்கள் அல்லவா
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா

செல்ல பொய்களும் சுகங்கள் அல்லவா
இங்கு விழியின் வலிகளும் வரங்கள் அல்லவா

வரங்கள் என்பது மலைகள் அல்லவா
அது விழுந்து எழுவது துயரம் அல்லவா

காதல் என்பது கடவுள் அல்லவா
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா

காதல் என்றால் பொய்கள் அல்லவா
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா
---
கண்கள் மூடி படுத்தால் கனவில் உந்தன் பிம்பம்
காலை நேரம் எழுந்தால் நினைவில் உந்தன் சுகந்தம்
உனை பார்க்கும் முன்பு நானே வெட்ட வெளியிலே திரிந்தேன்
உன் அருகில் வந்ததால் வேடந்தாங்கலை உணர்ந்தேன்
உனக்காக தானே உயிர் வாழ்வேன் நானே
நீ இன்றி நானே வெரும் கூடு தானே
தாயோடு உணர்கின்ற வெப்பத்தை நீயே தந்தாய்
---
காதல் என்பது கடவுள் அல்லவா
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா

காதல் என்றால் பொய்கள் அல்லவா
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா
---
காற்றில் ஆடும் கைகள் நெருங்கி நெருங்கி துரத்தும்
விரலை பிடித்து நடக்க விருப்பம் நெருப்பை கொடுக்கும்
உந்தன் அருகில் நானும் இருந்தால் நிமிடம் நொடிகள் என கரையும்
எனை விலகி நேரம் பிரிந்தால் நேரம் பாரமாய் கணக்கும்
உன் அருகில் இருந்தால் என்ன இனி வேண்டும்
உலகம் கையில் வந்ததாய் எண்ணம் ஒன்று தோன்றும்
தாயோடு உணர்கின்ற வெப்பத்தை நீயே தந்தாய்
---
காதல் வருவது புரிவது இல்லையே
அதை கடவுள் கூட தான் அறிவதில்லையே
பூக்கள் பூப்பது தெரிவதில்லையே
அதை யாரும் எங்குமே பார்த்ததில்லையே

காதல் வருவது புரிவது இல்லையே
அதை கடவுள் கூட தான் அறிவதில்லையே
பூக்கள் பூப்பது தெரிவதில்லையே
அதை யாரும் எங்குமே பார்த்ததில்லையே

ராம் - நிழலினை நிஜமும்

நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவரை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா

நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவரை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா
---
நடமாடும் சாவமா நான் இங்கே இருக்கேன்
விதி செய்த சதியா தெரியல்ல அம்மா
கரைதட்டும் அலையும் கடலில் தான் சேரும்
அது போல என்னையும் சேதுக்கம்மா
உன் பிள்ளை என்று ஊர் சொல்லும் போது
எனக்கே நான் யாரோ என்று ஆகி போனேன்
ஒத்த சொந்தம் நீ இருந்தால் போதும்மா
மொத்த பூமி எனக்கே தான் சொந்தம்மா
பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா
பூமிக்கு நான் வந்ததென்ன குத்தம்மா
---
திசை எல்லாம் எனக்கு இருளாகி கிடைக்கு
எங்கேயோ பயணம் தொடருதம்மா
என்னோட மனசும் பழுதாகி போச்சு
சரி செய்ய வழியும் தெரியல அம்மா
சூரியன் உடைஞ்ச பகல் இல்ல அம்மா
ஆகாயம் மறைஞ்ச அகிலமே சும்மா
என்ன சுத்தி என்னனமோ நடக்கு தம்மா
கண்டதெல்லாம் கனவாகி போயிடுமா
தூகத்தில்ல உன்னை நானும் தொலைச்சேன் அம்மா
தேடி தர தெய்வம் வந்து உதவிடுமா
---
நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவரை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா

ராம் - விடிகின்ற பொழுது

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா
---
உன்னாலே எனக்குள் உருவான உலகம்
பூகம்பம் இன்றி சிதறுதடா
எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே
எனை இன்னும் வாழ சொல்லுதடா
தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்
தொட போகும் நேரம் மரணத்தின் வாசல்
காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடிச்சு
மெல்ல மெல்ல என்னை கொல்ல துணிஞ்சிடிச்சு
தீயில் என்னை நிக்க வச்சி சிரிக்கிறதே
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே
ஆஅ..
---
காற்று தீ போல கண்மூடி தனமாய்
என் சோகம் சுடர் விற்று எரியுதுடா
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்
வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா
யாரிடம் உந்தன் கதை பேச முடியும்
வார்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்
பச்சை நிலம் பாலை வனம் ஆனதடா
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா
காலம் கூட கண்கள் மூடி கொண்டதடா
உன்னை விட கல்லரையே பக்கமடா
---
விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா

அறிந்தும் அறியாமலும் - கொஞ்சம் கொஞ்சம்

கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உனை பிடிச்சிருக்கா
ஏன் புரியவில்லை
கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் ஆசை இருக்கா
ஏன் புரியவில்லை

வெளியிலே மறைத்தேனே
விருப்பமாய் நினைத்தேனே
எனக்குள்ளே இரண்டானேன்
இது காதல் தானா புரியவில்லை

ஏ பெண்ணே உன்னை மறைக்காதே
மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓ..
ஏ நெஞ்சே உன்னை அழைக்காதே
அழைக்காதே உன்னை புதைக்காதே

கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உனை பிடிச்சிருக்கா
ஏன் புரியவில்லை
கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் ஆசை இருக்கா
ஏன் புரியவில்லை
---
இவன் இருளா இல்லை ஒளியா எனக்குள் குழப்பம்
புரியவில்லை
இவன் விரலா இல்லை நகமா சின்ன தயக்கம்
எனக்குள் இவன் மெல்ல இவனுக்குள் நான் மெல்ல
இது சரியா புரியவில்லை
காதல் வரவில்லை வந்துவிட வழியில்லை
வந்து விட்டதா புரியவில்லை
---
ஏ பெண்ணே உன்னை மறைக்காதே
மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓ..
ஏ நெஞ்சே உன்னை அழைக்காதே
அழைக்காதே உன்னை புதைக்காதே
--
எங்கோ இருந்தான் என்னுள் நுழைந்தான்
எப்படி புகுந்தான் புரியவில்லை
லேசாய் சிரித்தான் லேசாய் முறைத்தான் என்ன விடையோ
வழக்கம் போல் வருகிறான் வம்புகளும் புரிகிறான்
என்ன நினைப்பான் புரியவில்லை
நானே சொல்லிவிட்டால் நானே ஒப்புக்கொண்டால்
தவறில்லையா புரியவில்லை
---
ஏ பெண்ணே உன்னை மறைக்காதே
மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓ..
ஏ நெஞ்சே உன்னை அழைக்காதே
அழைக்காதே உன்னை புதைக்காதே

கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உனை பிடிச்சிருக்கா
ஏன் புரியவில்லை
கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் ஆசை இருக்கா
ஏன் புரியவில்லை
வெளியிலே மறைத்தேனே
விருப்பமாய் நினைத்தேனே
எனக்குள்ளே இரண்டானேன்
இது காதல் தானா புரியவில்லை

ஏ பெண்ணே உன்னை மறைக்காதே
மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓ..
ஏ நெஞ்சே உன்னை அழைக்காதே
அழைக்காதே உன்னை புதைக்காதே