உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

ஏழு ஜி ரெயின்போ காலனி - கண் பேசும் வார்தை

கண் பேசும் வார்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை,
கடல் கை கூடி மறைவதில்லை
கண்ணாடி இதயம் இல்லை,
கடல் கை மூடி மறைவதில்லை

காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள்மனம் மறப்பதில்லை

ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

கண் பேசும் வார்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை,
கடல் கை மூடி மறைவதில்லை
---
காட்டிலே காயும் நிலவு, கண்டு கொள்ள யாரும் இல்லை
கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை
தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்கு சொந்தமில்லை
மின்னலின் ஒளியை பிடிக்க மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை
விழி உனக்கு சொந்தமடி, வேதனைகள் எனக்கு சொந்தமடி
அலை கடலை கடந்த பின்னே
நுரைகள் மற்றும் கரைக்கே சொந்தமடி
---
கண் பேசும் வார்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை,
கடல் கை மூடி மறைவதில்லை
---
உலகத்தில் எத்தனை பெண் உள்ளது
மனம் ஒருத்தியை மற்றும் கொண்டாடுது
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது
பனி துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது
பூமியில் உள்ள பொய்கள் எல்லாம்
அட புடவை கட்டி பெண் ஆனது
ஹே புயல் அடித்தால், மலை இருக்கும்
மரங்களும் பூக்களும் மறைந்துவிடும்
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்
---
ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

கண் பேசும் வார்தை

கண் பேசும் வார்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை,
கடல் கை மூடி மறைவதில்லை

காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள்மனம் மறப்பதில்லை

No comments:

Post a Comment