அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே?
மலையூரின் சாரலிலே என்னை மார்போடு சேர்த்தவளே?
உன்னை அள்ளி தானே உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்
அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே?
---
நீ உடுத்தி போட்ட உடை என் மனதை மேயுதடா
நீ சுருட்டி போட்ட முடி மோதிரமாய் ஆகுமடி
இமையலே நீ கிறுக்க இதழலே நான் அழிக்க
கூச்சமின்றி கூச்ச பட்டு போகிறதே
சடையலே நீ இழுக்க இடைமேலே நான் வழுக்க
காய்ச்சலுக்கும் காய்ச்சல் வந்து மேய்கிறதே
என்னை திரியாகி உன்னில் விளக்கேற்றி
என்னாளும் காத்திருப்பேன்?.
---
அழகூரில் பூத்தவளே என்னை அடியோடு சாய்த்தவளே?
---
நீ முறிக்கும் சோம்பலிலே நான் ஒடிஞ்சி சாஞ்சிடுவேன்
நீ இழுக்கும் முச்சுகுள்ளே நான் இறங்கி தூங்கிடுவேன்
குறிலாக நான் இருக்க நெடிலாக நீ வளர்க
சென்னைதமிழ் சங்கத்தமிழ் ஆனதடி
அரியாமல் நான் இருக்க அழகாக நீ திறக்க
காதல் மலை ஆயுள் வரை தூறுமடா
என்னை மறந்தாலும் உன்னை மறவாத
நெஞ்சோடு நானிருப்பேன்
--
அன்பூரில் பூத்தவனே ..ம்..
என்னை அடியோடு சாய்த்தவளே?..
மலையூரின் சாரலிலே
என்னை மார்போடு சேர்த்தவளே?
உன்னை அள்ளி தானே உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து உதிராமல் காப்பேன்
Thursday, June 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment