உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

உன்னால் முடியும் தம்பி - புஞ்சை உண்டு

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல - எங்க
பாரதத்தில் சோத்துச்சண்ட தீரவில்ல

வீதிக்கொரு கட்சியுண்டு
சாதிக்கொரு சங்கமுண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதியில்ல - சனம்?
நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல - இது
நாடா இல்ல வெறும் காடா - இதை
கேட்க யாரும் இல்லை தோழா
இது
நாடா இல்ல வெறும் காடா - இதை
கேட்க யாரும் இல்லை தோழா

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல - எங்க
பாரதத்தில் சோத்துச்சண்ட தீரவில்ல
---
வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டிவைத்து கொடுத்தது
ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமே
வீடின்றி வாசலின்றி தவிக்குது
எத்தனை காலம் இப்படி போகும் என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம் என்றிங்கு மாறும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு
---
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல - எங்க
பாரதத்தில் சோத்துச்சண்ட தீரவில்ல
---
ஆற்றுக்குப் பாதை இங்கு யாரு தந்தது
தானாகப் பாதை கண்டு நடக்குது
காற்றுக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது
தானாகப் பாட்டு ஒன்னு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே
காலையில் தோன்றும் சூரியன் போலே பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா
கங்கை தெற்கே பாயாத காவேரியோடு சேராதா
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா
---
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கிவரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல - எங்க
பாரதத்தில் சோத்துச்சண்ட தீரவில்ல

இது
நாடா இல்ல வெறும் காடா - இதை
கேட்க யாரும் இல்லை தோழா
இது
நாடா இல்ல வெறும் காடா - இதை
கேட்க யாரும் இல்லை தோழா

1 comment: