உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

நாயகன் - நீ ஒரு காதல் சங்கீதம்

நீ ஒரு காதல் சங்கீதம்...
நீ ஒரு காதல் சங்கீதம்...
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்

நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்
---
வானம்பாடி பறவைகள் ரெண்டு ஊர்வலம் எங்கோ போகிறது

காதல் காதல் எனுமொரு கீதம் பாடிடும் ஓசை கேட்கிறது

இசை மழை எங்கும்...
இசை மழை எங்கும் பொழிகிறது எங்களின் ஜீவன் நனைகிறது

கடலலை யாவும் இசை மகள் மீட்டும் அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்
---
நீ ஒரு காதல் சங்கீதம்...
நீ ஒரு காதல் சங்கீதம்...
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்...
---
பூவினைச் சூட்டும் கூந்தலில் எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்?

தேனை ஊற்றும் நிலவினில் கூட தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?

கடற்கரைக் காற்றே...
கடற்கரைக் காற்றே வழியை விடு தேவதை வந்தால் என்னோடு

மணல்வெளி யாவும் இருவரின் பாதம் நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே
---
நீ ஒரு காதல் சங்கீதம்...
நீ ஒரு காதல் சங்கீதம்...
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்...

No comments:

Post a Comment