உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

பாடு நிலாவே - மலையோரம் வீசும் காத்து

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா

யாரரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாய் தந்தை பாட்டு தானம்மா

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
---
வான் பறந்த தேன் சிட்டு நான் புடிக்க வாரதா
கல்லிருக்கும் ரோசப்பூ கை கலக்க கூடாதா
ராப்போது ஆன உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா தொட ஆகாத ஆணா
உள் மூச்சு வாங்கினேனே
முள் மீது தூங்கினேனே
இல்லாத பாரமெல்லாம்
நெஞ்சொடு தாங்கினேனே
நிலவ நாளும் தேடும் வானம் நான்
---
மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
---
குத்தாலத்து தேன் அருவி சித்தாடை தான் கட்டாதா
சித்தாடை தான் கட்டி ஏழ கையில் வந்து கிட்டாதா
ஆத்தோரம் நாணல் பூங்காத்தோடு ஆட
ஆவாரம் பூவில் அது தேவாரம் பாட
இங்கே நான் காத்திருக்க
என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீயிருந்து
என் மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம் இந்த ஜீவன் தான்
---
மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
யாரரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாய் தந்தை பாட்டு தானம்மா

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா

1 comment: