கலைவாணியே
கலைவாணியே உனைத்தானே அழைத்தேன் உயிர்த்தீயை
வளர்த்தேன் வரவேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை நினைத்தேன்
அழுதேன் இசை தரும்
கலைவாணியே உனைத்தானே அழைத்தேன் உயிர்த்தீயை
வளர்த்தேன் வரவேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுரை நினைத்தேன்
அழுதேன் இசை தரும்
கலைவாணியே
---
சுரம் பாடி சிரித்தாய் சிரிப்பாலே எரித்தாய்
மடி மீது மறித்தேன் மரு ஜென்மம் கொடுத்தாய்
சிறு விரல்களில் தலை கோதி
மடிதனில் எனை வளர்த்தாய்
இசை எனும் வரம் வரும் நேரம்
திசை சொல்லவில்லை பறந்தாய்
முகம் காட்ட மறுத்தாய்....ஆ.ஆ.ஆ.....
முகம் காட்ட மறுத்தாய் முகவரியை மறைத்தாய்
நீ முன் வந்து பூச்சிந்து
விழித்துளிகள் தெரிக்கிறது துடைத்துவிடு
---
கலைவாணியே உனைத்தானே அழைத்தேன் உயிர்த்தீயை
வளர்த்தேன் வரவேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுரை நினைத்தேன்
அழுதேன் இசை தரும் கலைவாணியே
---
உள்ளம் அழுதது உன்னைத் தொழுதது
உனது உயிரில் இவன் பாதி
கங்கை தலையினில் மங்கை உடலினில்
சிவனும் இவனும் ஒரு ஜாதி
ராமன் ஒருவகை கண்ணன் ஒருவகை
இரண்டும் உலகில் சம நீதி
அங்கே திருமகள் இங்கே கலைமகள்
அவளும் இவளும் சரிபாதி
கண்ணீர் பெருகியதே...அ ஆ.ஆ.ஆ....
கண்ணீர் பெருகிய கண்களில் உன் முகம் அழகிய நிலவென
மிதக்கும்
உயிரே, உயிரின் உயிரே, அழகே, அழகின் அழகே
இனி அழ வலுவில்லை விழிகளில் துளியில்லை
இனி ஒரு பிரிவில்லை துயர் வர வழியில்லை
வருவாய்....
Sunday, June 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment