உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

நான் பாடும் பாடல் - பாடவா உன் பாடலை - சோகம்

பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை
என் கண்ணிலே ஏன் நீரோடை ஓ..
என் கண்ணிலே ஏன் நீரோடை ஓ..
பாடவா உன் பாடலை
---
தேங்கும் கண்ணீரில் உந்தன் பிம்பம்
பூவின் நெஞ்சில் பூகம்பம்
தேங்கும் கண்ணீரில் உந்தன் பிம்பம்
பூவின் நெஞ்சில் பூகம்பம்
சுடரோடு எரியாது திரி போன தீபம்
உயிர் போன பின்னாலும் உடல் இங்கு வாழும்
கண்ணீரில் சுகம் காணாதோ மனம்
நீ தந்த மாங்கல்யம் என் ஜென்ம சாபல்யம்
---
பாடவா உன் பாடலை
என் கண்ணிலே ஏன் நீரோடை ஓ..
பாடவா உன் பாடலை
---
கண்ணா என் நெஞ்சில் காதல் காயம்
ஆறுதல் சொல்லும் ஆகாயம்
கண்ணா என் நெஞ்சில் காதல் காயம்
ஆறுதல் சொல்லும் ஆகாயம்
புயலோடு போராடும் பூவாகும் வாழ்க்கை
இருந்தாலும் என் நெஞ்சில் ஏன் இந்த வேட்கை
உன் பாதை எங்கே என் பாதம் அங்கே
வளராமல் தேயாமல் வாழ்கின்ற நிலவிங்கே
---
பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை
என் கண்ணிலே ஏன் நீரோடை ஓ..
என் கண்ணிலே ஏன் நீரோடை ஓ..
பாடவா உன் பாடலை
பாடவா உன் பாடலை

No comments:

Post a Comment