உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

நான் பாடும் பாடல் - தேவன் கோவில் தீபம்

தேவன் கோவில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் இன்று

தேவன் கோவில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் இன்று
கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது
உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது

தேவன் கோவில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் இன்று
---
பாவை நின்றேன் சோலை ஓரம்
நீயும் வந்தாய் மாலை நேரம்
பார்வை நான்கும் பேசும் ஜாலம்
பார்த்தால் போதும் வெள்ளம் மோதும்
காதல் தேவியே...நீ என் ஜோதியே?
ஊஞ்சல் போலே எண்ணம் கோடி
நெஞ்சில் ஆடும் உன்னை நாடி
கண்ணே நீயும் கேளாயோ
---
அன்பே நீயும் எங்கே வந்தாய்
யாரை கண்டு இங்கே நின்றாய்
உள்ளம் என்னும் மேடை உண்டு ஆடவா?
கண்ணில் கோடி ராகம் கொண்டு பாடவா

தேவன் கோவில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் இன்று
---
வானும் காற்றும் உந்தன் பேரை
எந்தன் வாழ்வில் வந்தாய் நீயே
உன்னை எண்ணி ஏங்கும் பூவை
உந்தன் அன்பே என்றும் தேவை
நாளை ஊர்வலம் நாமும் காணுவோம்
காலம் கோடி ஆகும் போதும்
காதல் கீதம் என்றும் வாழும்
கண்ணா நீயும் கேளாயோ...
---
தேவன் கோவில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் இன்று

தேவன் கோவில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் இன்று
கண்கள் ரெண்டும் காதல் சந்தம் சொன்னது
உள்ளம் உந்தன் வாசல் தேடி வந்தது

தேவன் கோவில் தீபம் ஒன்று
ராகம் பாடும் நேரம் இன்று

No comments:

Post a Comment