உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

டூயட் - நான் பாடும் சந்தம்

நான் பாடும் சந்தம் வார்த்தை உன் சொந்தம்
குரல் வேறு ஆனாலும் பொருள் ஒன்று அல்லவா

எல்லாமே நம் வாழ்வில் இரண்டாக உள்ளது
காலம் ஒரு டூயட் அதிலே இரவு பகல் இரண்டும் உண்டு

நான் பாடும் சந்தம் வார்த்தை உன் சொந்தம்
குரல் வேறு ஆனாலும் பொருள் ஒன்று அல்லவா

நதி ஒன்று கரை இரண்டு நதியின் ஜதி ஒன்று
வாழ்க்கை ஒரு டூயட் அதிலே இன்ப துன்பம் இரண்டும் உண்டு

தாய் ஒன்று மகன் இரண்டு தமிழின் குரல் ஒன்று
அன்பு ஒரு டூயட் இதிலே அண்ணன் தம்பி இருவரும் உண்டு

No comments:

Post a Comment