உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

ரோஜா கூட்டம் - புத்தம் புது ரோஜாவே

புத்தம் புது ரோஜாவே,
பூப்படைந்த ரோஜாவே,

புத்தம் புது ரோஜாவே,
பூப்படைந்த ரோஜாவே,
என் செய்குவாய் என்னை?
நீ என்னை கொன்றாலும்,
நெருப்பென்னை தின்றாலும்,
நித்தம் சூற்றுவேன் உன்னை,
என் காதலியே,
உன் கண்ணசைவால்,
துளி புன்னகையால்,
அடி நெஞ்சில் பூத்ததே,

ரோஜா கூட்டம்,
ரோஜா ரோஜா கூட்டம்,
நீ ஒரு ரோஜா கூட்டம்,
மனசுக்குள் ரோஜா கூட்டம்,

ரோஜா கூட்டம்... ரோஜா கூட்டம்...
---
காதலை உலகில்,
கழித்துவிட்டாலே,
கல்லரை பூமியடி,

காதலி ஒருத்தி,
தூங்குவதாலே,
கல்லரை கோயிலடி,

தாய் தந்தை ஆசான்,
தவிர்த்ததை கூட,
சொல்லிதரும் காதலடி,

என் காதலியே,
உன் வளைவுகளால்,
அந்த அளவுகளால்,
அடி நெஞ்சில் பூத்ததே,
---
ரோஜா கூட்டம்,
ரோஜா ரோஜா கூட்டம்,
நீ ஒரு ரோஜா கூட்டம்,
மனசுக்குள் ரோஜா கூட்டம்,
---
திரிகளை எரிக்கும்,
தீயே வாழ்க,
உன்னால் ஒளி அடைந்தோம்

தேகத்தை எரிக்கும்,
காதலே வாழ்க,
உன்னால் உயிர் வளர்தோம்

அறுவது வயது,
ஆயிரம் வருடம்,
அள்ளி தரும் காதலடி,

அந்த காதலினால்,
நல்ல கலவி உண்டு,
அந்த சுகங்களினால்,
அடி நெஞ்சில் பூக்குமே,
---
ரோஜா கூட்டம்,
ரோஜா ரோஜா கூட்டம்,
நீ ஒரு ரோஜா கூட்டம்,
மனசுக்குள் ரோஜா கூட்டம்,

ரோஜா கூட்டம்,
ரோஜா ரோஜா கூட்டம்,
நீ ஒரு ரோஜா கூட்டம்,
மனசுக்குள் ரோஜா கூட்டம்,

ரோஜா கூட்டம்... ரோஜா கூட்டம்...

No comments:

Post a Comment