உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

நான் அடிமை இல்லை - ஒரு ஜீவன் தான் - ஜோடி

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் நியாபகம் உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது
---
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன்
வேராரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன்
உருவானது நல்ல சிவரஞ்சனி உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி
ராகங்களின் ஆலாபனை மோகங்களின் ஆராதனை
உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்
---
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது
---
காவேரி கடல்சேர அணைதாண்டி வரவில்லையா
ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையா
வரம் நாளெல்லாம் இனி மதனோர்சவம்
வலையோசைதான் நல்ல மணிமந்திரம்
நான் தானைய்யா நீலாம்பரி தாலாட்டவா நடுராத்திரி
சுருதியும் லயமும் சுகமாய் உருகும் தருணம்
---
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் நியாபகம் உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது

No comments:

Post a Comment