வார்த்தை தவறி விட்டாய்.... கண்ணமா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்தில் எல்லாம் உன்னைபோல்
பாவை தெரியுது அடி
என்னடி மீனாட்சி - சொன்னது என்னாச்சு
என்னடி மீனாட்சி - சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு
என்னடி மீனாட்சி - சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு
---
உந்தன் உதட்டில் நிறைந்திருகும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்து இருக்கும் துளி விஷம்
உந்தன் உதட்டில் நிறைந்திருகும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்து இருக்கும் துளி விஷம்
நெஞ்சம் துடித்திடும் நாழி
நீயோ அடுத்தவன் தொழி
என்னை மறந்துபோவதும் நியாயமோ
இந்த காதல் ஒவியத்தின்
பாதை மாறியது
காலம் செய்துவிட்ட மாயமோ
ஒரு மனம் உருகுது
ஒரு மனம் விலகுது
ஏய்
---
என்னடி மீனாட்சி - சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயச்சு
---
அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கு ஒரு சிறுகதை
அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கு ஒரு சிறுகதை
கண்ணன் தனிமையிலே பாட
ராதை தன் வழியே ஓட
இந்த பிரிவை தங்குமோ என் மனம்
ஒரு நூலில் அடுகின்ற ஊஞ்சல் போன்றதடி
நாளும் மாறுகின்ற உன் மனம்
எனக்கு இன்று புரிந்தது
எவள் என்று தெரிந்தது
ஏய்
---
என்னடி மீனாட்சி - சொன்னது என்னாச்சு
என்னடி மீனாட்சி - சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு
வார்த்தை தவறி விட்டாய்.... கண்ணமா
மார்பு துடிக்குதடி
Thursday, June 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
நன்றி செந்தில். 🖖
ReplyDelete