உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Thursday, June 10, 2010

திருமலை - நீயா பேசியது

நீ என்பது எதுவரை? எதுவரை?
நான் என்பது எதுவரை? எதுவரை?
நாம் என்பதும் அதுவரை அதுவரைதான்

வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை
சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை
காதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான்

நீயா பேசியது?
என் அன்பே நீயா பேசியது?
தீயை வீசியது?
என் அன்பே தீயை வீசியது?

கண்களிலே உன் கண்களிலே
பொய் காதல் நாடகம் ஏனடி?
அன்பினிலே மெய் அன்பினிலே
ஓர் ஊமை காதலன் நானடி
நீயா பேசியது
நீயா பேசியது
நீயா பேசியது
நீயா பேசியது

நீ என்பது எதுவரை? எதுவரை?
நான் என்பது எதுவரை? எதுவரை?
நாம் என்பதும் அதுவரை அதுவரைதான்

வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை
சாவென்பதும் ஒரு முறை ஒரு முறை
காதல் வரும் ஒரு முறை ஒரு முறைதான்
---
ஏதோ நான் இருந்தேன், என் உள்ளே காற்றாய் நீ
கிடைத்தாய்
காற்றை மொழி பெயர்த்தேன், அன்பே சொல் மூச்சை ஏன்
பறித்தாய்?

இரவிங்கே பகல் இங்கே தொடு வானம் போனது எங்கே?
உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே?

உருகினேன் நான் உருகினேன், இன்று உயிரில் பாதி
கருகினேன்
---
நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது?
--
வேரில் நான் அழுதேன், என் பூவோ சோகம் உணரவில்லை
வேஷம் தரிக்கவில்லை முன் நாளில் காதல்
பழக்கமில்லை

உனக்கென்றே உயிர் கொண்டேன், அதில் ஏதும் மாற்றம் இல்லை
பிரிவென்றால் உறவு உண்டு அதனாலே வாட்டம் இல்லை

மறைப்பதால் நீ மறைப்பதால்
என் காதல் மாய்ந்து போகும?
---
நீயா பேசியது?
என் அன்பே நீயா பேசியது?
தீயை வீசியது?
என் அன்பே தீயை வீசியது?

கண்களிலே உன் கண்களிலே
பொய் காதல் நாடகம் ஏனடி?
அன்பினிலே மெய் அன்பினிலே
ஓர் ஊமை காதலன் நானடி
நீயா பேசியது
நீயா பேசியது
நீயா பேசியது
நீயா பேசியது

No comments:

Post a Comment