உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

வாழ்வே மாயம் - நீல வான ஓடையில்

நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா

நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி

நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
---
காளிதாசன் பாடினான் மேகதூதமே
தேவிதாசன் பாடுவான் காதல் கீதமே
இதழ்களில் தேன்துளி ஏந்திடும் பைங்கிளி
இதழ்களில் தேன்துளி ஏந்திடும் பைங்கிளி
நீ இல்லையேல் நான் இல்லையே ஊடல் ஏன் கூடும் நேரம்
---
நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
---
நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம்
விழியில் ஏன் கோபமோ விரகமோ தாபமோ
விழியில் ஏன் கோபமோ விரகமோ தாபமோ
ஸ்ரிதேவியே என் ஆவியே எங்கே நீ அங்கே நான்தான்
---
நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி

நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா

No comments:

Post a Comment