உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

டூயட் - என் காதலே

love is torture
words can't just express
love is gamble
with tears of pain in life's distress
loves make you life a strain
where money's there
to loose the game
love has this crazy name
of pain and sorrow
die down in shame


என் காதலே என் காதலே,
என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ,
ஏன் கண் இரண்டை கேட்கிறாய்?

சிலுவைகள் சிறகுகள்,
ரெண்டில் என்ன தரப் போகிறாய்?
கிள்ளுவதை கிள்ளிவிட்டு,
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்?

என் காதலே என் காதலே,
என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ,
ஏன் கண் இரண்டை கேட்கிறாய்?
---
காதலே நீ பூ எரிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்,
காதலே நீ கல் எரிந்தால்
எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீள்வதா இல்லை வீழ்வதா?
உயிர் வாழ்வதா இல்லை போவதா?
அமுது என்பதா விஷம் என்பதா?
உன்னை அமுதவிஷம் என்பதா?
---
என் காதலே என் காதலே,
என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ,
ஏன் கண்ணிரண்டை கேட்கிறாய்?
---
காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டாய்
நான் குலுங்கி குலுங்கி அழுதேன்
இது மாற்றமா, தடுமாற்றமா?
என் நெஞ்சிலே, பனி மூட்டமா?
நீ தோழியா? இல்லை எதிரியா?
என்று தினமும் போறாட்டமா?
---
என் காதலே என் காதலே,
என்னை என்ன செய்யப் போகிறாய்?
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ,
ஏன் கண் இரண்டை கேட்கிறாய்?

சிலுவைகள் சிறகுகள்,
ரெண்டில் என்ன தரப் போகிறாய்?
கிள்ளுவதை கிள்ளிவிட்டு

No comments:

Post a Comment