உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

நினைவெல்லாம் நித்யா - பனிவிழும் மலர்வனம்

பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்

பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
---
சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர்மாலை
சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர்மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்குச் சிரித்து கண்கள் மூடும்
---
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்
---
காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் ஹ ஹா
பரிகாசம்
காமன் கோயில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே
வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இருவிழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி

பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்
பனிவிழும் மலர்வனம்
பனிவிழும் மலர்வனம்
பனிவிழும் மலர்வனம்

No comments:

Post a Comment