நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவரை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா
நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவரை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா
---
நடமாடும் சாவமா நான் இங்கே இருக்கேன்
விதி செய்த சதியா தெரியல்ல அம்மா
கரைதட்டும் அலையும் கடலில் தான் சேரும்
அது போல என்னையும் சேதுக்கம்மா
உன் பிள்ளை என்று ஊர் சொல்லும் போது
எனக்கே நான் யாரோ என்று ஆகி போனேன்
ஒத்த சொந்தம் நீ இருந்தால் போதும்மா
மொத்த பூமி எனக்கே தான் சொந்தம்மா
பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா
பூமிக்கு நான் வந்ததென்ன குத்தம்மா
---
திசை எல்லாம் எனக்கு இருளாகி கிடைக்கு
எங்கேயோ பயணம் தொடருதம்மா
என்னோட மனசும் பழுதாகி போச்சு
சரி செய்ய வழியும் தெரியல அம்மா
சூரியன் உடைஞ்ச பகல் இல்ல அம்மா
ஆகாயம் மறைஞ்ச அகிலமே சும்மா
என்ன சுத்தி என்னனமோ நடக்கு தம்மா
கண்டதெல்லாம் கனவாகி போயிடுமா
தூகத்தில்ல உன்னை நானும் தொலைச்சேன் அம்மா
தேடி தர தெய்வம் வந்து உதவிடுமா
---
நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவரை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா
Thursday, June 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment