உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

நல்லவனுக்கு நல்லவன் - சிட்டுக்கு செல்ல

சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது
ரத்ததில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது
அன்னையும் இல்லை,தந்தையும் இல்லை கனவா வெறும் நினைவா
நெஞ்சிலே வரும் பந்தமே - சிறுகதையா, தொடர்கதையா

---
நாம் போடும் மேடைகளோ நாடக மேடை
நாம் போகும் ஓடங்களோ காகித ஓடம்
பாசம் என்பத வேஷம் என்பத
காலம் செய்த கோலம்
பாசம் என்பத வேஷம் என்பத
காலம் செய்த கோலம்
கூடி வாழ கூடுதடி ஓடி வந்த ஜீவன்
ஆடிப்பாட காடு தேடும் யார் செய்த பாவம்
தாய் என்னும் பூமாலை தரை மேலே வாடுதே
---
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது
ரத்ததில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது
அன்னையும் இல்லை,தந்தையும் இல்லை கனவா வெறும் நினைவா
நெஞ்சிலே வரும் பந்தமே - சிறுகதையா, தொடர்கதையா

சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது
---
காலங்கள் மாறி வரும் காட்சிகள் இங்கே
நியாயங்கள் ஆறுதலை கூறுவதேங்கே
மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம்
சூடும் கன்னி பாவை
மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம்
சூடும் கன்னி பாவை
பாசதீபம் கையில் ஏந்தி வாழ வந்த வேளை
கண்களாலே பெண்மை பாட இன்பம் கண்ட மங்கை
நாம் வாடி நின்றாலும் நலமோடு வாழ்கவே
---
சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது
ரத்ததில் வந்த சொந்தங்கள் அந்த உறவு முறிந்தது
தந்தையும் இல்லை அன்னையும் இல்லை கனவா வெறும் நினைவா
நெஞ்சிலே வரும் பந்தமே - சிறுகதையா, தொடர்கதையா

சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது

No comments:

Post a Comment