அவள் ஒரு மேனகை
என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை
கலையென்னும் மானிடை
மின்னும் தேவதை
கலையென்னும் மானிடை
மின்னும் தேவதை
காவிய வடியோரு
நடமாடும் பொன்மகள்
ரஞ்சனி சிவரஞ்சனி சிவரஞ்சனி
---
கரும்புகழ் தேன்மொழி அரும்புகழ் புன்னகை
கரும்புகழ் தேன்மொழி அரும்புகழ் புன்னகை
என் கனவிலும் ஆடிடும் அவளின் கலை
மனம் நினைக்கின்றது சுகம் பிறக்கின்றது
மனம் நினைக்கின்றது சுகம் பிறக்கின்றது
அவள் போல் எங்கே எவரும் இல்லை
---
அவள் ஒரு மேனகை
என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை
சிவரஞ்சனி சிவரஞ்சனி
---
ஆடிய பாதம் ஆயிரம் வேதம்
அவளது நாதம் தமிழ்ச்சங்க கீதம்
ஆடிய பாதம் ஆயிரம் வேதம்
அவளது நாதம் தமிழ்ச்சங்க கீதம்
பார்வையில் குளிரும் மார்கழி மாதம்
பார்வையில் குளிரும் மார்கழி மாதம்
அதிகாலையில் வரும் பூபாள ராகம்
---
அவள் ஒரு மேனகை
என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை
சிவரஞ்சனி சிவரஞ்சனி
---
அவள் சிங்கார பூங்குழல் ஆவணி மேகம்
தேன் உலாவிடும் கல்யாணி ராகம்
அவள் சங்கீத பாவம் கங்கையில் தேகம்
தாமரை பூவின் சூரிய தாகம்
காலமே... அவள் விழிகள் சொன்னபடி ஆடுமே
தாளமே... அவள் கால்கள் கேட்டபடி தாவுமே
மொழியோ ஆலய சங்கொலி
இடையோ அசைந்திடும் கிங்கினி
என்ன சொல்லி என்ன பாட
கம்பன் இல்லை கவிதை பாட
என்ன சொல்லி என்ன பாட
கம்பன் இல்லை கவிதை பாட
ஆ....ஆ.....
அவள் தஞ்சை தரணியில்
கொஞ்சும் அழகிய கோவிலன்றோ
நான் அவள் பக்தன் அன்றோ
---
அவள் ஒரு மேனகை
என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை
சிவரஞ்சனி சிவரஞ்சனி
Sunday, June 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment