உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Wednesday, March 31, 2010

பையா - அடடா மழைடா

அடடா மழைடா
அட மழைடா
அழகா சிரிச்சா
புயல் மழைடா
அடடா மழைடா
அட மழைடா
அழகா சிரிச்சா
புயல் மழைடா
மாரி மாரி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாலாச்சு
கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு
ஏதேதோ ஆயாச்சு
மயில் தோக போல
இவ மழையில் ஆடும் போது
ரயில் பாலம் போல
என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு
ஏதேதோ ஆயாச்சு

அடடா மழைடா
அட மழைடா
அழகா சிரிச்சா
புயல் மழைடா

பாட்டு பாட்டு
பாடாத பாட்டு
மழை தான் பாடுது
கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வெச்ச
மழைக்கொரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலயே
உனக்குள்ளே தேடி பாரு
மந்திரம் போல இருக்கு
புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு
தல மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே
என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே

உன்னப்போல வேறாறும் இல்ல
என்னவிட்டா வேறாறு சொல்ல
சின்ன சின்ன கண்ணு ரெண்ட
கொடுத்தென்ன அனுப்பி வெச்சான்
இந்த கண்ணு போதலயே
எதுக்கிவள படைச்சி வெச்சான்
பட்டாம்பூச்சி பொண்ணு
நெஞ்சு படபடக்கும் நின்னு
பூவும் இவளும் ஒண்ணு
என்னை கொன்னுப்புட்டா கொன்னு
போவது எங்கே
நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே

அடடா மழைடா
அட மழைடா
அழகா சிரிச்சா
அனல் மழைடா

அடடா மழைடா
அட மழைடா
அழகா சிரிச்சா
அனல் மழைடா

பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து குடை பிடிக்க
வானம் ரெண்டாச்சு
பூமி துண்டாச்ச்சு
என் மூச்சு காத்தால
மழ கூட சூடாச்சு
குடையை நீட்டி யாரும்
இந்த மழையை தடுக்க வேணாம்
அணைய போட்டு யாரும்
என் மனச அடக்க வேணாம்
கொண்டாடு கொண்டாடு
கூத்தாடி கொண்டாடு

1 comment:

  1. இதில் ஒரு திருத்தம்
    மழைடா னுக்கு பதிலா “மழடா ”னு போட்டா நல்லா இருக்கும் :)

    ReplyDelete