வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னார் குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதையா திருமணம்
அந்கு அசரப்பொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்... ஓ...
கல்யாணமாம் கல்யாணம் ஓ (௨)
(வாளை மீனுக்கும்)
3. ஊர்வலத்தில் ஆடி வரும் நண்டுதானே நாட்டியம்
அய்யா மேளதாளம் முழங்கிவரும் வஞ்சிர மீனு வாத்தியம் ( ௨ )
பாறை மீனு நடத்தி வரார் பாத்தியும்
நம்ம பாறை மீனு நடத்தி வரார் பாத்தியம்
அங்கு தேர்போல போகுதய்யா
ஊர்கோலக் காட்சியும் - ஊர்கோலக் காட்சியும்
(வாளை மீனுக்கும்)
கூவம் ஆறு கடலில் சேரும் வந்த இடத்தில் லவ்வுங்க
இதை பார்த்துவிட்ட உளுவ மீனு வச்சதையா வத்திங்கோ ( ௨ )
பஞ்சாயத்து தலைவரான சுறா மீனுதானுங்கோ ஓ
அவர் சொன்னபடி இருவருக்கும நிச்சயதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ
(வாளை மீனுக்கும்)
மாப்பிளை சொந்த பந்தம் மீசைக்காரர் இறாங்கோ
அந்த நெத்திலிப் பொடியன காரப் பொடியன் கலகலன்னு இருக்குது ( ௨)
பெண்ணுக்கு சொந்த பந்தம் மீசைக்கார கொடுவா ஓ
அந்த சந்தன மீனு வவ்வாலு மீனு
வரவழைப்ப தருகுது - வரவழைப்ப தருகுது
(வாளை மீனுக்கும்)
மாப்பிளை வாளை மீனு பழவர்காடு தானுங்கோ
அந்த மணப்பொண்ணு விலாங்குமீனு மீஞ்சுறு தானுங்கோ ( ௨ )
இந்த திருமணத்தை நடத்தி வைக்கும் திருக்கைவாலு அண்ணங்கோ ஓ ( ௨ )
இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுசன் யாருங்கோ
தலைவரு திமிங்கலந்தானுங்கோ
வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்
அந்த சென்னார் குனி கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த நடுக்கடலில் நடக்குதையா திருமணம்
அந்கு அசரப்பொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்... ஓ...
கல்யாணமாம் கல்யாணம் ஓ
வாளை மீனுக்கும் - அந்த சென்னார்குனி - அந்த நடுக்கடலில் - அந்த
அசரப்பொடி ஆளுக்கெல்லாம் கும்மாளம்
Monday, March 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment