காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு

கார்காலம் அழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவணி குடை பிடிப்பாயா
அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க

பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்
நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல
என் பெண்மை திறந்து நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னை திறந்துகொள்ள சொல்கிறதா
என் நெஞ்சம் அரண்டு நிற்கிறதே
நான் சிறு குழந்தை என இருந்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன்
என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால் சரியா சரியா

கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
Tuesday, March 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment