உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Monday, March 29, 2010

பீமா - எனதுயிரே எனதுயிரே

எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்

நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளும் காதல் காதல் வாசமே

எனதுயிரே...

இனி இரவே இல்லை
கண்டேன் உன் விழிகளில்
கிழக்கு திசை
இனி பிரிவே இல்லை
அன்பே உன் உளரலும்
எனக்கு இசை

உன்னை காணும் வரையில்
எனது வாழ்க்கை வெள்ளைக் காகிதம்
கண்ணால் நீயும் அதிலே
எழுதிப் போனாய் நல்ல ஓவியம்

சிறு பார்வையில் ஒரு வார்த்தையில்
தோன்றுதே நூறு கோடி வானவில்

எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்

மரமிருந்தால் அங்கே என்னை
நான் நிழலென விரித்திடுவேன்

இலை விழுந்தால் ஐயோ என்றே
நான் இருதயம் துடித்திடுவேன்


இனிமேல் நமது இதழ்கள்
இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே

நெடுநாள் நிலவும் நிலவின்
களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே

உருவாக்கினாய் அதிகாலையை
ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே

எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்

நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளும் காதல் காதல் வாசமே

No comments:

Post a Comment