எடுத்து வந்தோம் நல்ல வரம்
ஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்
எங்க புரம் பண்ணபுரம்
முல்லையாரு மொதல் மொதல முத்தமிடும் அந்த எடம்
எல்லைகள தாண்டி வந்த எங்க அப்பன் பொறந்த எடம் (2)
ஏழெழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்
எடுத்து வந்தோம் நல்ல வரம்
ஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்
எங்க புரம் பண்ணபுரம்
-
வீரபாண்டி மாரியம்மா எங்குமுள்ள காளியம்மா
தாய் சீல காரியம்மா தந்தா மங்கலமா
பாட்டி சின்ன தாயி தந்த பாசமுள்ள பாவலரு
கூட்டி எடுத்து தந்த பாட்டு பொங்குதம்மா
பட்டிக்காட்ட விட்டுபுட்டு பட்டிணத்தில் குடி புகுந்து
மெட்டுக்களை கட்டி தந்த மொத்த சொத்தும் எங்களுக்கு
ஆத்தி என்ன சொல்ல அன்புக்கும் பண்புக்கும் அளவு எங்கிருக்கு
அப்பரிந்து இப்பவர எங்களுக்கு என்ன குற
எப்பொழுதும் மக்களுக்கு சொல்வோம் நன்றிகளை
-
ஏழெழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்
எடுத்து வந்தோம் நல்ல வரம்
ஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்
எங்க புரம் பண்ணபுரம்
-
அள்ளி உரல நெல்ல போட்டு அழுத்தி அழுத்தி குத்துங்கடி
அத்த மகனத்தான் பாத்துகிட்டு அமுக்கி புடிச்சு குத்துங்கடி
நாம நெல்லு குத்துகிற அழக கண்டு மச்சான் நேருல வருத பாருங்கடி
அவன் நேருல வருத பாத்துபுட்டு நம்ம நெஞ்சு துடிக்குது கேளுங்கடி
-
மேற்கு மல சாரலிலே மேஞ்சு வந்த மேகம் எல்லாம்
கோத்து தந்த பாட்டு சத்தம் எப்போதும் கேக்கும்
நாத்தெடுத்து நடவு நட்டு நம்ம சனம் பாடுனது
ஊர் அரிய கேட்கும் போது உற்சாகமாக்கும்
அப்பனோட அறிவிருக்கு அன்னையோட அரைவணப்பு
சத்தியமா நிச்சயமா ஆஸ்திவரம் எங்களுக்கு
தாயின் அன்பிருக்கு அது கொடுக்குது மகிழ்ச்சி உங்களுக்கு
வயலுல வெளஞ்ச நெல்லு நகரத்த தேடி வந்து
பசிகள தீர்ப்பது போல் பாரு எங்க கத
-
ஏழெழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்
எடுத்து வந்தோம் நல்ல வரம்
ஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்
எங்க புரம் பண்ணபுரம்
முல்லையாரு மொதல் மொதல முத்தமிடும் அந்த எடம்
எல்லைகள தாண்டி வந்த எங்க அப்பன் பொறந்த எடம் (2)
ஏழெழு தலைமுறைக்கும் எங்க சாமி பக்கபலம்
எடுத்து வந்தோம் நல்ல வரம்
ஏழு ஸ்வரம் எங்களுக்கு எப்போதுமே கூட வரும்
எங்க புரம் பண்ணபுரம்
No comments:
Post a Comment