உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Monday, March 29, 2010

ஏழு ஜி ரெயின்போ காலனி - நினைத்து நினைத்து பார்த்தேன்

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே?
உன்னால் தானே னானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மௌனமா?
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்?
உடைந்து போன வளையல் பேசுமா?
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே?
தோளில் சாய்ன்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடியும் முன்னமே
தூக்கம் கலைந்ததே (நினைத்து நினைத்து...)

பேசி போன வார்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கறையும் வார்த்தை கறையுமா?
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா?
தொடர்ந்து வந்த நிழல்கள் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன் நானும்....

No comments:

Post a Comment