உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Monday, March 29, 2010

குரு - ஆருயிரே மன்னிப்பாயா

தம் தர தம் தர மாஸ்தி மாஸ்தி
தர தம் தர தம் தர மாஸ்தி மாஸ்தி
தர தம் தம் தர தம்
என் ஆசை தாவது உன்மேலே (தம் தர)

ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே
ஓ... நீயில்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாயோ
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே
ஆருயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல் என் சகியே

ஆனால் என்னை விட்டுப் போனால்
எந்தன் நிலா சோர்ந்து போகும்
வானின் நீலம் தேய்ந்து போகுமே
முன் கோபக் குயிலே
பித்துப் பித்துக் கொண்டு தவித்தேன் தவித்தேன்
உன்னை எண்ணி நான் வாடிப்போனேன்
நீயில்லாமல் கவிதையும் இசையும்
சுவையே தராதே
ஐந்து புலன்களின் அழகியே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே... (தம் தர...)


ஓ.... ரோஜாப் பூவை... ரோஜாப் பூவை
உள் காயம் செய்தால் நியாயமா?
பேசிப் பேசி என் ஊடல் என்ன தீருமா?
நிலாவிலே வாழ்வது இன்பம்
இருந்தும் இல்லை என்பது துன்பம்
அகிம்சை முறையில் நீயும் கொல்லாதே (தம் தர...)

ஆருயிரே மன்னிப்பேனா மன்னிப்பேனா
சொல்லையா என் உயிரே
ஆருயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே ஓ...
நீயில்லாத ராத்திரியோ
காற்றில்லாத இரவாய் ஆகாதோ (தம் தர...)

No comments:

Post a Comment