உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின்
மின் பார்வையில் மீதியும் தேய
ஹ்ம்ம் இன்று நேற்று என்று இல்லை
ஏன் இந்த நிலை
ஹ்ம்ம் உன்னை கண்ட நாளின் நின்றே
நான் செய்யும் பிழை
உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின்
மின் பார்வையில் மீதியும் தேய
உனக்குள் இருக்கும் மயக்கம்
அந்த உயரத்து நிலவை அழைக்கும்
இதழின் விளிம்பு துளிர்க்கும்
என் இரவினை பனியினில் நனைக்கும்
எதிரினில் நான் எரிகிற நான்
உதிர்ந்துடும் மழைச்சாரம் நீயே
ஒரு முறை அல்ல முதல் முறை அல்ல
தினம் தினம் என்னை சூளும் தீ
உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின்
மின் பார்வையில் மீதியும் தேய
முதல் நாள் பார்த்த வனப்பு
துளி குறையாவும் இல்லை உனக்கு
உறக்கம் விழிப்பில் கனவாய்
உனை காண்பதே வழக்கம் எனக்கு
அருகினிலே வருகையிலே
துடிப்பதை நிறுத்துது நெஞ்சம்
முதல் முதல் இன்று நிகழ்கிறதென்று
நடிப்பது கொஞ்சம் வஞ்சமே
உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின்
மின் பார்வையில் மீதியும் தேய
ஹ்ம்ம் இன்று நேற்று என்று இல்லை
ஏன் இந்த நிலை
ஹ்ம்ம் உன்னை கண்ட நாளின் நின்றே
நான் செய்யும் பிழை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment