தொடத்தொட மலர்வதென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?
தொடத்தொட மலர்வதென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன?
பார்வைகள் புதிதா ஸ்பரிசங்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன?
தொடத்தொட மலர்வதென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?
அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில்
காலடித் தடம் பதித்தோம் யார் அழித்தார்
நந்தவனக் கரையில் நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்
காதலன் தீண்டாத பூக்களில் தேனில்லை
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை
தொடத்தொட மலர்வதென்ன பூவே
சுட சுட நனைந்ததென்ன?
பார்வைகள் புதிது ஸ்பரிசங்கள் புதிது
நரம்புகள் பின்ன பின்ன நடுக்கமென்ன?
தொடத்தொட மலர்வதென்ன பூவே
சுட சுட நனைந்ததென்ன?
பனி தனில் குளித்த பால்மலர் காண
இருபது வசந்தகள் விழி வளர்த்தேன்
பசித்தவன் அமுதம் பருகிடத் தானே
பதினேழு வசந்தகள் இதழ் வளர்த்தேன்
இழை மூடும் மலராக இதயத்தை மறைக்காதே
மலர் கொல்லும் காற்றாக இதயத்தை உலுக்காதே
தொடத்தொட மலர்வதென்ன பூவே
சுட சுட நனைந்ததென்ன?
பார்வைகள் புதிதா ஸ்பரிசன்கள் புதிதா
மழை வர பூமி மறுப்பதென்ன?
தொடத்தொட மலர்வதென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?
Monday, March 29, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment