இதுவரை இல்லாத உணர்விது
இதயதில் உண்டான கனவிது
பலித்திடும் அன்னாளை தேடிடும் பாடல் கேட்டாயோ (2)
மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே (2)
-
இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே
இல்லாமலே நித்தம் வரும் கனவு
கொல்லாமல் கொல்ல
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம்
-
அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண் மேகமும் வெண் நிலவும் போல
என் தன் மன எண்ணங்களை யார் அறிவார்
என் நெஞ்மோ உன் போல அல்ல
ஏதோ ஓர் மாற்றம் நிலை புரியாத தோற்றம்
இது நிறந்தரம் அல்ல மாறிவிடும் மன நிலை தான் !
-
மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே மொட்டண உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள் நமக்கு முன்னாலே (2)
தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே (2)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment