Can you feel her
is your heart speaking to her
can you feel the love
yes
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்
ஒரு கோடி பூ பூக்கும் வெட்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளை பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்து பார்க்க நெஞ்சம் ஏங்கும்
-
கனவுகளில் வாழ்ந்த நாளை கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்ட பெண்ணாய் திரும்பி திரும்பி பார்க்கிறேன்
அங்கும் இங்கும் ஓடும் கால்கள் அசைய மறுத்து வேண்டுதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க இதயம் கூட ஏங்குதே
என்னானதோ ஏதானதோ
கண்ணாடிபோல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்க்க போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க
மழையின் சாரல் என்னை தாக்க
விடைகள் இல்லா கேள்வி கேட்க
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
-
ஆதி அந்தமும் மறந்து உன் அருகில் கறைந்து நான் போனேன்
ஆண்கள் வெட்கபடும் தருணம் உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில் இன்று பூ செடிகள் பூக்கிறதே
இவள்தானே உந்தன் பாதி கடவுள் பதில் கேட்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment