உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

மெல்ல திறந்தது கதவு - குழலூதும் கண்ணனுக்குக்

குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ

என் குரலோடு மச்சான் உங்கக் குழலோச போட்டி போடுதா
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு

---
மலைக்காத்து வீசுரபோது மல்லிகைப்பூ பாடாதா
மழமேகம் கூடுறபோது வண்ண மயில் ஆடாதா

என் மேனி தேனரும்பு என் பாட்டு பூங்கரும்பு
மச்சான் நான் மெட்டெடுப்பேன்
உன்ன தான் கட்டிவைப்பேன்
சுகமாக தாளம் தட்டி பாடட்டுமா
உனக்காச்சு எனக்காச்சு சரிஜோடி நானாச்சு கேளைய்யா
---
குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்கக் குழலோச போட்டி போடுதா
---
கண்ணா உன் வாலிப நெஞ்ச என் பாட்டு உசுப்புரதா
கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குரதா

வந்தாச்சு சித்திரைதான் போயாச்சு நித்திரைதான்
பூவான பொண்ணுக்குத்தான்
ராவானா வேகுறதான்
மெதுவாகத் தூது சொல்லிப் பாடட்டுமா
வெளக்கேத்தும் பொழுதானா இளனெஞ்சு படும் பாடு கேளைய்யா
---
குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்கக் குழலோச போட்டி போடுதா
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு

குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ

No comments:

Post a Comment