உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

புன்னகை மன்னன் - கவிதை கேளுங்கள்

ஆஅ...

கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம்
பூமி இங்கு சுற்றும் மட்டும்
ஆட வந்தேன் என்ன நட்டம்
பூமி இங்கு சுற்றும் மட்டும்
ஆட வந்தேன் என்ன நட்டம்
ஓடும் மேகம் நின்று பார்த்து கைகள் தட்டும்

கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம்
---
ஆஅ.........

நேற்று என் பாட்டு ஸ்ருதியில் விலகியதே...
பாதை சொல்லாமல் விதியும் விலகியதே...
காலம் நேரம் சேரவில்லை, காதல் ரேகை கையில் இல்லை
சாக போனேன் சாகவில்லை, மூச்சு உண்டு வாழவில்லை
வாய் திறந்தேன் வார்த்தை இல்லை, கண் திறந்தேன்
பார்வை இல்லை
தனிமையே இளமையின் சோதனை,
புரியுமா இவள் மனம், இது விடுகதை
---
கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
கவிதை கேளுங்கள்
நடனம் பாருங்கள்
---
ஜகன ஜகன்ன ஜம் ஜம்
ஜகன ஜகன்ன ஜம் ஜம்
...................
ஆஅ...
ஜகன ஜகன்ன ஜம் ஜம்

ஓம் ததீம் ததீம் பதங்கள் பாட
ஜகம் நடுங்க என் பதங்கள் ஆட
ஜகன ஜகன
தம் தம் தக்க
ஜகன ஜகன
தம் தம் தம்
ஜகன ஜகன
தம் தம் தக்க
ஜகன ஜகன
தம் தம் தம்
ஜகன தீம்த ஜகன தீம்த
தீம்த தீம்த தீம்த தீம்த
ஓம் ததீம் ததீம் பதங்கள் பாட
ஜகம் நடுங்க என் பதங்கள் ஆட
---
பாறை மீது பவள மல்லிகை
பதியம் போட்டதாரு
ஓடும் நீரில் காதல் கடிதம்
எழுதிவிட்டது யாரு
அடுப்பு கூட்டி அவிச்ச நெல்லை
விதைத்து விட்டது யாரு
அலையில் இருந்து உலையில் விழுந்து
துடி துடிக்கிது மீனு
இவள் கனவுகள் நனவாக மறுபடி ஒரு உறவு
சலங்கைகள் புது இசை பாட விடியட்டும் இந்த இரவு
கிழக்கு வெளிச்சம் இருட்டை கிழிக்கட்டும்
இரவின் முடிவில் கனவு பலிக்கட்டும்
இருண்டு கிடக்கும் மனமும் வெளுக்கட்டும்...
---
ஓஓஓம்ம்ம்....

ஓம் ததீம் ததீம் பதங்கள் பாட
ஜகம் நடுங்க என் பதங்கள் ஆட
ஓம் ததீம் ததீம் பதங்கள் பாட
ஜகம் நடுங்க என் பதங்கள் ஆட

No comments:

Post a Comment