உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

கேளடி கண்மணி - மண்ணில் இந்த

மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா

மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா
---
வென்னிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமின்றி
சந்தனமும் சங்க தமிழும் பொங்கிடும் வசந்தமும்
சிந்தி வரும் பொங்கும் அமுதம் தங்கிடும் குமுதமும்
கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்
கன்னி துணை இழந்தால் முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்
அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிது தான்
---
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ
---
முத்து மணி ரத்தினங்களும் கட்டிய பவளமும்
கொத்து மலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்
சுற்றி வர செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்
எண்ணி விட மறந்தால் எதர்க்கோர் பிறவி
இதனையும் இழந்தால் அவன் தான் துறவி
முடி முதல் அடி வரை முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா

2 comments: