உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

அழகன் - சாதி மல்லிப் பூச்சரமே

சாதி மல்லிப் பூச்சரமே

சாதி மல்லிப் பூச்சரமே
சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி
எங்கெங்கே முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு

சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி
எங்கெங்கே முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு
---
எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா
தேசம் வேறல்ல தாயும் வேறல்லா ஒன்றுதான்
தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்
கடுகு போல் உன் மனம் இருக்க கூடாது
கடலை போல் விரிந்ததாய் இருக்கட்டும்
உன்னை போல் எல்லோரும் என் எண்ணோனும் அதில் இன்பத்தை தேடோனும்
---
சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி
---
உலகமெல்லாம் உண்ணும்போது நாமும் சாப்பிட எண்ணுவோம்
உலகமெல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி
பாடும் நம் தமிழ்ப்பாட்டன் சொன்னது கண்மணி
படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பார்த்தோமா
படிச்சத நெனச்சு நாம் நடக்கத்தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சு
இந்த நாட்டுக்கு நாமாச்சு
---
சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி
எங்கெங்கே முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
கன்னித் தமிழ்த் தொண்டாற்று அதை முன்னேற்று
பின்பு கட்டிலில் தாலாட்டு

1 comment:

  1. இந்த பாடலை எழுதியவர் ஐயா புலவர் புலமைபித்தன் அவர்கள்

    ReplyDelete